கால் வைத்ததுதான் தாமதம்.. கோவை மக்களுக்கு கிடைத்த குஷியான செய்தி! கையோடு ஆர்டரை கொடுத்த முதல்வர்
கோவை: தமிழ்நாடு வீட்டுவசதி திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு புதிய திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைகிறதா என மாவட்ட வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

முதல் கட்டமாக இன்று கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மாலையில் போத்தனூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் கோவை சுகுணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை செய்யப்பட்ட நிலங்களில், வாரியத் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டு, அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும். நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத இப்பிரச்சினை குறித்து அரசிடம் மனுக்கள் அளித்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சிறப்பு புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு. அதன்மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. அவற்றை பரிசீலித்து முடிவு எடுக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
குழுவின் கவனமான பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி துறையினால் நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இனங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டத்தில் பயன்படுத்தாத 1141.68 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பு உத்தரவுகள் திரும்ப பெறுதல் தொடர்பான அரசாணை 4.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
இவ்வரசாணைபடி, கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்துார் வடக்கு வட்டத்தைச் சார்ந்த கணபதி, காளப்பட்டி, தெலுங்குபாளையம், விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம் ஆகிய கிராமங்கள், கோயம்புத்துார் தெற்கு வட்டத்தைச் சார்ந்த உப்பிலிபாளையம் கிராமம் மற்றும் பேரூர் வட்டத்தைச் சார்ந்த வீரகேரளம், வடவள்ளி, குமாரபாளையம் கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுக்கப்படுகிறது. இதன் மூலம் 5386 குடும்பங்கள் பயனடைவார்கள்.
மேற்படி அரசாணையில் கண்டுள்ள புல எண்கள் மீது தமிழ்நாடு வீட்டுவசதி திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதால் அப்புலங்களுக்கான வருவாய்த்துறை, பதிவுத்துறை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு, உள்ளுர் திட்டக் குழுமம் மற்றும் இதர அரசு துறைகளில் விண்ணப்பங்கள் பெறப்படும்போது அந்தந்த துறைகளின் விதிமுறைகள், அரசாணைகள் மற்றும் வழக்கமான அலுவலக நடைமுறையை பின்பற்றி மேல் நடவடிக்கையினை தொடர அரசாலஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட புல எண்களுக்காக இனி வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெறத்தேவையில்லை. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications