"மங்கி பாக்ஸ் & வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு உள்ளதா? அறிகுறி இருந்தால் என்ன செய்யணும்!" மா.சு விளக்கம்
கோவை: கோவை அரசு மருத்துவமையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரணியன், வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் மங்கி பாக்ஸ் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
Recommended Video
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப்பிரிவை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
அங்கு பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் அவர் வழங்கினார். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜைக்கா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டார்.

மா. சுப்பிரணியன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரணியன், "தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2099 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவுகள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 32 படுக்கைகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை
அனைத்து வசதிகளுடன் நவீன உபகரணங்களை கொண்ட சிகிச்சை பிரிவாக இது அமைக்கப்பட்டு உள்ளதால் நோயாளிகளுக்கு இது மிகுந்த பயனை தரும். தற்கொலை முயற்சி செய்யும் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை அளிக்க சிஎஸ்ஆர் நிதியில் இருந்து 12 படுக்கைகள் கொண்ட தனி தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜைக்கா நிதியில் கட்டப்படும். இந்த பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

நோய் பரவல்
வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கேரளாவில் ஒருவருக்கு மட்டும் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு நோய் பரவல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குரங்கம்மை நோய் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற 12 நாடுகளில் பரவி உள்ளது. வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

பயப்பட வேண்டாம்
மேலும் பிரிட்டன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த ஒருவருக்கு முகத்தில் கொப்புளம் இருந்ததால் அவரது ரத்த மாதிரியை பூனே ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்தோம். அதில் மங்கி பாக்ஸ் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. மங்கி பாக்ஸ் நோய் குறித்த அறிகுறியோ சந்தேகமோ இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளோம். எனவே மக்கள் அந்நோய் குறித்து பயப்பட வேண்டாம்.

மருத்துவ சுற்றுலா
கோவையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ள சூழலில், இரு ஆண்டுகளில் பணி முற்றிலுமாக முடிவடையும். அந்த சமயத்தில் கோவையில் மருத்துவ சுற்றுலாவும் மேம்படும் இதேபோல் நோயாளிகளின் தேவைக்கு தகுந்தபடி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பு மேம்படுத்தபடும்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications