டாஸ்மாக்கில் பார்ட்டி பண்ட் இல்ல.. பாட்டில் பண்ட் ஒழிக்கப்படும்! அடித்து சொல்லும் அமைச்சர் விக்னேஷ்!

Subscribe to Oneindia Tamil

கோவை: டாஸ்மாக் துறையில் பார்ட்டி பண்டு என்பது இல்லாமல் ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பாட்டில் பண்டு இல்லாத நிலையை உருவாக்கப்படும் எனவும், டாஸ்மாக் ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான் நாள் வெகுதூரத்தில் இல்லை என தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அடுத்த தலைமுறையை போதைப் பழக்கம் இல்லாத தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கம். கடந்த ஆட்சி காலங்களில் டாஸ்மார்க் துறையில் நடந்த ஊழல்கள் அனைவருக்கே தெரிந்தது தான்.

டாஸ்மாக் துறையில் பார்ட்டி பண்டு என்பது இல்லாமல் ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பாட்டில் பண்டு இல்லாத நிலையை உருவாக்கப்படும். மது வாங்க வருபவர்களிடம் கூடுதல் பணம் கேட்பதை தடுக்கப்படும் நிறைய முறைகேடுகள் இருந்தது. அதை எல்லாம் தனித்தனியாக தடுக்கப்பட்டு வருகிறது.

TASMAC Vignesh Tamil Nadu Government

அமைச்சர் விக்னேஷ்

தற்போதைய வரை இவை அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக சரி செய்யப்படும் பக்கத்து மாநிலங்களில் இந்த துறை பிரச்சனை இல்லாமல் உள்ளது. அதேபோல் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும். இது மட்டும் எங்களது நோக்கம் இல்லை. எங்களுடைய முழு நோக்கம் சமுதாயத்தினுடைய மனநிலையை மாற்ற வேண்டும். கடைகள் திறப்பதில் நிறைய போட்டிகள் வந்து கொண்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் முக்கியமான நோக்கம், இந்த மது பழக்கத்திலிருந்து மக்களை மீட்டுக் கொண்டு இருந்து வேண்டும்.

டாஸ்மாக்

அடுத்த தலைமுறையை போதைப் பழக்கம் இல்லாத தலைமுறையாக உருவாக்க வேண்டும். அதுதான் எங்கள் முதல் பணி. 234 தொகுதிகளிலும் போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் உருவாக்குவதே நோக்கம். தமிழகத்தில் தற்போது 25 போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளது. அரசு மருத்துவமனையை தொட்டு உள்ளது எங்களுடைய நோக்கம். இதனுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலமாக அதிக மது அருந்துவோர் மது பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். 234 தொகுதிகளிலும் போதை மீட்பு மறுவாழ்வு மையம் கொண்டுவர வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்கள்

டாஸ்மாக் ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான் நாள் வெகுதூரத்தில் இல்லை. தற்போது அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள். இதுபோன்ற முயற்சி 23 ஆண்டுகளில் யாரும் எடுக்கவில்லை. ஊதிய உயர்வு, பராமரிப்பு செலவு, சீருடை போன்ற பல்வேறு சலுகைகள், பொங்கல் முன்பணம் தீபாவளி போனஸ், ஒரு நாளைக்கு 8 மணி நேரம்தான் வேலை, வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் விடுமுறை ESI போன்ற திட்டங்கள் இந்த அரசு அமைந்த உடன் தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கூடுதலாக பணம்

இதை ஏற்றுக்கொண்டும் சில கடைகளில் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது, அது வேண்டாம்.மது பழக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் கூலி வேலைக்கு செல்பவர்கள், மூட்டை தூக்குபவர்கள், அவர்களிடமிருந்து கூடுதல் பணம் பெறுவதை தமிழக அரசு விரும்பவில்லை. முறைகேடு நடக்க கூடாது என்பதை அரசு தெளிவாக உள்ளது. டாஸ்மார்க் ஊழியர்கள் வேறு மாவட்டங்களில் பணிக்கு வரவில்லை என்றால் உடனடியாக பணிக்கு திரும்புங்கள். 100 நாட்களில் பல்வேறு சலுகைகளை அரசு தரும்.

கள்ளுக்கு அனுமதி

நிச்சயமாக கோரிக்கைகள் முழுவதாக செய்யப்படும் தூரம் தூரம் இல்லை. தென்னை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கு அனுமதி குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை பனை மூலமாக கள் இறக்குவது பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கேரளா செல்லும் வழியில் எரி சாராயம் பிடிக்கப்படுகிறது.

முதல்வர் விஜய்

இந்த எரிசாராயம் எங்கு செல்கிறது என்று பார்த்தால் பக்கத்து மாநிலத்தில் உள்ள கள்ளுக்கடைகளுக்கு செல்வதாக தகவல் உள்ளது. இதில் என்னென்ன சாதக பாதகங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். முதல்வரின் டேபிளில் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+