Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் ஒரு ஆக்டர்.. நாங்கள் டாக்டர்! எம்பி பதவிக்காக திமுக ஊதுகுழலாக மாறிய கமல்! தமிழிசை அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

கோவை: விஜய் ஒரு நடிகர் நாங்கள் டாக்டர். விஜய்க்கு வாக்களிப்பவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது எனவும், அதே நேரத்தில் 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல், அதில் விஜய்க்கும் பங்கு உள்ளது எனக் கூறியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன்.

கோவையில் இன்று நடைபெறும் மோடி தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்," மோடி தொழில் முனைவோர் எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். எப்பொழுதும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்வேன். இது ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நாங்கள் மோடியின் தொழில் முனைவோர் திட்டத்தில் கலந்துகொள்கிறோம். அதேசமயம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.

Tamilisai Soundararajan

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. யார் அந்த சார் என்ற கேள்வி இன்னும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்று கவலை அளிக்கக்கூடிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் காசா போரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மோடி தான் காரணம் என்றும் கூறுகிறார்கள். இதிலிருந்து அவர்கள் அரண்டு போய் உள்ளார்கள் என்பது தெரிகிறது. தமிழுக்கு நாங்களும் தான் சொந்தக்காரர்கள்.

கமல்ஹாசன்

தமிழுக்கு நீங்கள் மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்று கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்று இருந்தது. தேர்தல் ஆணையத்தால் கூட அங்கீகரிக்கப்பட முடியாத கட்சிகளில் நாற்பத்தி இரண்டில் ஒரு கட்சியாக அதனை நீக்கி உள்ளார்கள். திராவிட கட்சிகளுக்கு எதிராக தான் அரசியல் வாழ்வை கொண்டு வருவேன் என்று கூறிய அவர் திமுக எதை கூறுகிறதோ அதனை கேட்க வேண்டும். அவருக்கு ஒரு எம்பி பதவி கிடைத்தவுடன் திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார்.

சரத்குமார்

கமல் திமுகவுடன் கட்சியை இணைத்தார் என்றால் பாஜகவுடன் சரத்குமார் அவரது கட்சியை இணைத்திருக்கிறார். சரத்குமார் எங்களுடன் கட்சியைத்தான் இணைத்தார். ஆனால் இவர்கள் கூட்டணி கட்சி என்று சொல்லி ஒரு எம்பி பதவியை வாங்கி உள்ளார்கள். கமல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரா உறுப்பினரா அல்லது திமுகவின் தலைவரா உறுப்பினரா? கமலுடைய கட்சி அங்கீகாரத்தை இழந்திருக்கிறது. அதையும் சரத்குமார் கட்சியையும் எப்படி ஒப்பிட முடியும்.

நடிகர் விஜய்

விஜய் ஒரு நடிகர் நாங்கள் மருத்துவர்கள். விஜய்க்கு வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்களா என்று தெரியாது. தேர்தல் வரட்டும். அதனைப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் வேடிக்கை பார்ப்பதற்கு கூட்டம் வரும் எங்களுக்கும் கூட்டம் வரவில்லை என்று சொல்ல வேண்டாம். கட்சித் தலைவராக விஜய் தற்பொழுதுதான் அரசியலுக்குள் வந்துள்ளார். அரசியலில் போராட்டங்களை அவர் நடத்தியது கிடையாது. திமுகவிற்கு அவர் சவாலாக இருக்கட்டும். திமுகவிற்கு எதிரான எதிர்ப்பை அவர் தீவிரப்படுத்தட்டும்.

திமுக எதிர்ப்பு

திமுகவை வீட்டுக்கு அனுப்புகின்ற கடமை எங்களுக்கும் உள்ளது. விஜய்க்கும் உள்ளது. தற்பொழுது நடப்பது பாராளுமன்றத் தேர்தல் அல்ல. சட்டமன்றத் தேர்தல் என்பதை விஜய்க்கு ஞாபகப்படுத்த வேண்டும். அவர் யார் வீட்டுக்குள் இருக்கிறார்களோ அவர்களைத்தான் வெளியில் அனுப்ப வேண்டும். அப்படி பார்த்தால் சட்டமன்றத் தேர்தலில் கோட்டைக்குள் அமர்ந்திருப்பது திமுகதான். அவர்களைத்தான் அனுப்ப வேண்டும். விஜய் வாக்கு சதவீதத்தைப் பிரிக்கலாம்.

விஜய்க்கும் பங்கு

விஜய் எடுக்கப் போவது திமுக கூட்டணி ஓட்டுகளைத்தான். திமுகவை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் ஏதோ பாஜகவையும் ஏதோ தொடுவோம் என்றுதான் பேசுகிறார். அது வேண்டாம். 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்புகின்ற தேர்தல், அதில் விஜய்க்கும் பங்கு உள்ளது. திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள், திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் கூட்டணிக்கு வரலாம். அதே சமயம் இந்தக் கூட்டத்திற்கு வலு சேர்க்காமல் இருப்பவர்களும் திமுகவிற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. நான் யாருக்கும் அழைப்பு விடவில்லை என்றும், திமுகவைத் தோற்கடிப்பது அனைவரது கடமை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+