கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2026 தேர்தலில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடப் போவது அண்ணாமலையா, வானதி சீனிவாசனா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டியிடவுள்ளார். யார் இந்த வானதி சீனிவாசன் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வானதி சீனிவாசன் குடும்பம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிப்பவர் வானதி சீனிவாசன். கோவை மாவட்டம், உளியம்பாளையத்தில் கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர். பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். இவரது ஒரே தம்பியான சிவகுமார் வெளிநாட்டில் வசித்து வருகிறார். வானதி சீனிவாசனின் கணவரும் வழக்கறிஞர். ஆதர்ஷ், கைலஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

படிப்பு
கோவை தொண்டாமுத்தூர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிஎஸ்ஜி கல்லூரியில் வேதியியல் துறையில் இளங்கலைப் படிப்பை முடித்தார். பின்னர், சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு எனும் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிறந்த சமூக செயல்பாட்டாளராக இருந்த வானதி சீனிவாசன் 2011, 2016 ஆண் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தமிழக அரசியலில் பிரபலமானார்.
அரசியல் பயணம்
2011 சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் முதல்முறையாக சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு 6,911 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் மூன்றாவது இடத்தை பிடித்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகள் பெற்று மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் இரண்டாவது முறையாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் போட்டியிட்டனர். இந்த கடுமையான மும்முனை போட்டியில் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளும், கமல்ஹாசன் 51,489 வாக்குகளும் பெற்றனர். வானதி 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கோவை வடக்கு
2026 தேர்தலில் வானதி தொகுதி மாறுவதாக தகவல் வெளியானது. வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் முயற்சியை மேற்கொண்டு வந்தார். அண்ணாமலைக்கு, வானதி சீனிவாசனுக்கா என்ற போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது பாஜக வேட்பாளர் பட்டியலில் வானதி சீனிவாசன் பெயர் இடம்பெற்றுள்ளது.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications