அதிமுக பிரமுகருக்கு ஆஃபர்களை அள்ளித்தரும் பாஜக! ஆள் பிடிக்கும் படலம் தீவிரம்! அடுத்தது என்ன?
பாஜகவில் இணையுமாறு வந்த அழைப்பை அதிமுக பெண் பிரமுகர் நிராகரிப்பு.
கோவை: கோவையை சேர்ந்த அதிமுக முக்கிய பெண் பிரமுகருக்கு தேசியளவில் முக்கியப் பதவி வழங்கப்படும் என்ற உறுதியுடன் பாஜகவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் 6 மாதங்களுக்கு முன்பாகவே அதிமுக பெண் பிரமுகருக்கு தூது அனுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கு காரணம் தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, என பல மொழிகளில் மிகவும் சரளமாக பேசக்கூடிய திறமை அந்த பெண் பிரமுகரிடம் இருப்பதேயாகும்.

சோனாலி பிரதீப்
கோவை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் இணைச் செயலாளராக இருப்பவர் சோனாலி பிரதீப். இவரது தந்தை அதிமுககாரர். இவர்களது பூர்விகம் குஜராத் என்றாலும் தமிழ்நாட்டில் செட்டிலாகி மூன்று தலைமுறைகள் ஆகிவிட்டது. இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, தமிழ், மலையாளம், என பல மொழிகளிலும் சரளமாக பேசக் கூடிய சோனாலி பிரதீப், ஜெயலலிதா மீது கொண்ட பற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

கட்சியில் பதவி
அதிமுகவில் மாநில பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன. ஆனால் இவருக்கு கவுன்சிலர் சீட் கொடுக்கப்படவில்லை. இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இணையுமாறும் பல மொழிகள் தெரிந்திருப்பதால் பதவிகள் தேடி வரும் எனவும் 6 மாதங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து முக்கியப் பிரமுகர் ஒருவர் உறுதி கொடுத்துள்ளார்.

பாஜகவில் இணைய அழைப்பு
ஆனால் அதனை பொருட்படுத்தாத சோனாலி பிரதீப், ஆளை விடுங்க சாமி என்று கூறிவிட்டு அதிமுகவிலேயே தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருகிறார். இந்நிலையில் பாஜகவிலிருந்து முக்கியப் புள்ளிகளை அதிமுகவில் இணைத்து அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக பெண் பிரமுகரான சோனாலி பிரதீப்புக்கு பாஜகவில் இணையுமாறு தூது அனுப்பப் பட்டிருக்கிறது.

கட்சி மாறும் எண்ணமில்லை
விரைவில் தேசியளவில் முக்கியப் பதவி வழங்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டும் பாஜகவுக்கு சிறிதும் பிடிகொடுக்காமல் பெரிய கும்பிடு ஒன்றை போட்டிருக்கிறார் சோனாலி பிரதீப். கடைசி வரை ''அம்மா கட்சியில்'' தான் இருப்பேன் என்றும் கட்சி மாறும் எண்ணமே தமக்கு கிடையாது என்பதையும் அவர் தூது வந்தவர்களிடம் கூறியிருக்கிறார். இதனால் வேறு சில அதிமுக புள்ளிகளை இழுக்க பாஜக தீவிரம் காட்டுகிறது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications