"கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்!" டிஆர்பி ராஜா கோரிக்கையை உடனே ஏற்ற முதல்வர் ஸ்டாலின்
கோவை: தமிழ்நாட்டில் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் பிரச்சார களம் சூடுபிடித்து இருக்கிறது.

ஏற்கனவே இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுவிட்டது. இதற்கிடையே அந்தத் தேர்தல் அறிக்கையில் மற்றொரு பாயிண்ட்டை சேர்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோரிக்கை: அதாவது கோவையில் சர்வதேச தரத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக முதலில் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
இது தொடர்பாக முதலில் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த சில நாட்களாக, கோவை முழுவதும் நாங்கள் பிரச்சாரம் செய்தபோது, விளையாட்டுகளில் தீவிர ஆர்வமுள்ள பல இளைஞர்களைச் சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம், குறிப்பாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோவையின் ஆர்வம் ஈடு இணையற்றது. தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் 3 அணிகளின் ஓனர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள்.
Exclusive: அதிமுக கோட்டை என்பதை ஏற்கனவே உடைச்சாச்சு.. கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பரபர!
கிரிக்கெட் ஸ்டேடியம்: மேலும் வளர்ந்து வரும் கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் மேற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கோவை உட்பட ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிக பெரிய விளையாட்டு உட்கட்டமைப்பு தேவை. கடந்த ஓராண்டாக அதையே தான் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உருவாகி வருகிறார்.
கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். எனவே, தமிழகத்தில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த ஸ்டேடியத்தை கோவையில் நிறுவ வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன்.
உலகத் தரத்தில்: இந்த அதிநவீன ஸ்டேடியம் சர்வதேச அளவில் கிரிக்கெட் தரத்தை மறுவரையறை செய்வதாக இருக்கும். இந்த ஸ்டேடியம் ஒரு நெட் ஜீரோ ஸ்டேடியமாக உருவாக்கப்படும்.. இது நமது உள்ளூர் கிரிக்கெட் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது மட்டுமின்றி நீர்-பாதுகாப்பு மற்றும் காலநிலை-உணர்வு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகவும் செயல்படும். முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்" என்று அவர் எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோரிக்கையை ஏற்ற முதல்வர்: இந்த கோரிக்கையை ஏற்பதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர், "விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், லோக்சபா தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில் விளையாட்டில் தீவிர ஆர்வம் உள்ளவர்களின் பங்களிப்புடன் அங்கே அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டது போலவே கோவையில் அமையும் இந்த மைதானம் சென்னையின் ஐக்கானிக் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானமாக இருக்கும். நமது அரசும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளோம்" என்று பதிலளித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி












Click it and Unblock the Notifications