Exclusive: அதிமுக கோட்டை என்பதை ஏற்கனவே உடைச்சாச்சு.. கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பரபர!
கோவை: ஸ்டார் தொகுதியான கோவையில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள கணபதி ராஜ்குமார் நமது ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதனை பார்ப்போம்!
தமிழ்நாட்டில் இந்த லோக்சபா தேர்தலில் அனைவராலும் உற்று நோக்கப்படும் ஸ்டார் தொகுதியாக இருக்கிறது கோவை. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பாக சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

கோவை மக்களவை தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டு கடைசியாக வெற்றி பெற்றது 1996ல். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நேரடியாக போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொகுதியை சிபிஐஎம் கட்சிக்கு திமுக ஒதுக்கி, அதில் வெற்றியும் பெற்றது. இப்போது இந்த தொகுதியில் திமுக நேரடியாக களம் காண்கிறது. பாஜக, அதிமுகவும் நேரடியாக போட்டியிட உள்ளதால் நேரடி மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கோவை தேர்தல் களம் எப்படி இருக்கிறது? கள நிலவரம் என்ன? திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்தெல்லாம் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உடன் ஒன் இந்தியா தமிழ் சார்பில் கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
கேள்வி: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர இருக்கும் நிலையில் இங்கு ஏன் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என அண்ணாமலை தரப்பு திரும்பத் திரும்ப முன்வைக்கிறதே? இது கோவை வாக்காளர்கள் மனதை மாற்றுமா?
கணபதி ராஜ்குமார்: பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எல்லா கட்சிகளுமே நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் எனச் சொல்வார்கள். நாங்கள் இந்தியா கூட்டணி வெல்லும் என்கிறோம். மக்கள் மனநிலை அகில இந்திய அளவில் முடிவு செய்யப்பட வேண்டியது.
கேள்வி: பாஜக, ஆர்.எஸ்.எஸ். இங்கு பல ஆண்டுகளாக களத்தில் இறங்கிச் செயல்படுகிறது, ஆனால், திமுக, அதிமுக அதனை புரிந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறதே?
கணபதி ராஜ்குமார்: அப்படி என்றால் சட்டசபை தேர்தலில் ஏன் பாஜக அதிக இடங்களில் வெல்லவில்லை? உள்ளாட்சி தேர்தலில் ஏன் வெற்றி பெறவில்லை? ஆர்.எஸ்.எஸ் என்னதான் வேலை செய்து கொண்டிருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே?
கேள்வி: கோவை அதிமுகவின் கோட்டை என அறியப்படும் நிலையில், திமுகவின் முகமாக கோவை மாற்றப்படுமா?
கணபதி ராஜ்குமார்: உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 96 சீட்களை ஜெயித்தோம். அதுதான் இதற்கான ஆரம்பம். கண்டிப்பாக இந்த லோக்சபா தேர்தலிலும் ஜெயித்து அதனை மீண்டும் நிரூபிப்போம். கோவையில் திமுகவுக்கு புதிய அத்தியாயம் பிறந்துவிட்டது.

கேள்வி: அண்ணாமலையும், சிங்கை ராமச்சந்திரனும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ஆட்கள். சோஷியல் மீடியாவில் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது? இளம் தலைமுறை வாக்காளர்களை கவர உங்கள் திட்டம் என்ன?
கணபதி ராஜ்குமார்: சமூக வலைதளங்களில் சமீப காலமாக மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறேன். எனது பிரச்சாரங்கள், பயணங்கள், வாக்குறுதிகள் சமூக வலைதளங்களில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்வோம். மக்களுக்கு சேவையாற்றும் அரசியல் தான் திமுக அரசியல். மத, சாதி ரீதியாக இளைஞர்களை கொண்டு செல்வது எங்கள் அரசியல் அல்ல.
கேள்வி: எஸ்பி வேலுமணிக்கு இது அவரது கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயம், அண்ணாமலைக்கு தான் ஒரு செல்வாக்கான தலைவர் என்று நிறுவ வேண்டிய கட்டாயம், இந்த தேர்தல் களம் உங்களுக்கு சவாலாக இருக்கிறது.. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
கணபதி ராஜ்குமார்: திமுகவுக்கும் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடக்கும் போட்டி தான். அண்ணாமலையோ, சிங்கை ராமச்சந்திரனோ எங்களுக்கு போட்டி அல்ல. நாங்கள் போகிற இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு கிடைப்பதால் எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை. மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பே சாட்சி.
கேள்வி: கோவை தொகுதியில் மோடிக்கு வரவேற்பு உள்ளதாகவும், பாஜக கோட்டை என்றும் சொல்கிறார்களே?
கணபதி ராஜ்குமார்: ஒரு சில சம்பவங்களால் சில முறை பாஜக இங்கு ஜெயித்திருந்தாலும், அமைப்பு ரீதியாக பாஜகவிற்கு கோவையில் பலம் இல்லை. மக்களும் பாஜகவுடன் தொடர்பில் இல்லை. நாங்கள் கோவை மக்களுக்கு பல திட்டங்களைச் செய்தவர்கள். கோவை மத ரீதியாக பதற்றத்தில் இருப்பதாகக் கூறி அமைதியைச் சீர்குலைக்க நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் நுழைய வழிதேடும் பாஜக கோவையை ஒரு தளமாக பயன்படுத்த பார்க்கிறது. அதில் வெற்றி கிடைக்காது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications