"மேற்கே உதித்த சூரியன்".. செந்தில் பாலாஜிக்கு பறந்த CALL.. கொண்டாடிய ஸ்டாலின்.. விரைவில் கவுரவ பதவி
கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையை திமுக க்ளீன் ஸ்வைப் செய்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் திமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் ஏக குஷியில் இருக்கின்றனர்.
கிழக்கே உதிக்கும் சூரியனை உன்னை மேற்கே உதிக்க ஆணையிட்டோம் என்று சிட்டிசன் படத்தில் வரும் அஜித் பாடலைத்தான்.. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நிஜத்தில் நிகழ்த்திக்காட்டி இருக்கிறார். ஆம் உதய சூரியன் உதிக்கவே உதிக்காது என்று கருதப்பட்ட மேற்கு மண்டலத்தில் திமுக இந்த கிளீன் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதிலும் கோவையில் திமுக ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் அதிமுகவை வீழ்த்தி மொத்த மாநகராட்சியையும் கைப்பற்றி உள்ளது.

கோவை வெற்றி
கோவையில் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால்.. கண்ணை மூடிக்கொண்டு அது செந்தில் பாலாஜி என்று சொல்லிவிடலாம். வெளியூர் ஆட்கள் இருக்காங்க.. வெளியே அனுப்புங்க என்று எஸ்பி வேலுமணி ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா செய்தாரே.. அந்த வெளியூர் ஆளே கரூரை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜிதான். ஆம்.. கோவையில் ஒரு மாதம் டென்ட் அடித்து.. இவர் செய்த அரசியல் வியூகங்கள்தான் திமுக கோவையை கைப்பற்ற காரணம்.

தலைமை கிரீன் சிக்னல்
தலைமை கொடுத்த கிரீன் சிக்னல் காரணமாக மொத்தமாக ரத கத துரக பதாதைகளையும் அப்படியே களத்திற்கு கொண்டு வந்து கோவை வெற்றியை செந்தில் பாலாஜி ஆக்கி இருக்கிறார். கோவையை செந்தில் பாலாஜி வென்று கொடுத்துவிட்டால், அவருக்கு பெரிய பதவிகள் வரலாம் என்பதால் திமுகவிலேயே அவருக்கு எதிராக சிலர் பார்த்த உள் வேலைகளை எல்லாம் செந்தில் பாலாஜி முறியடித்து கோவையை சுருட்டி தனது பாக்கெட்டிற்குள் போட்டு இருக்கிறார்.

கோவை வெற்றி
கோவையில் மொத்தமாக 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. கோவையில்
திமுக - 73, காங் - 9, சிபிஎம் - 4, சிபிஐ - 4, மதிமுக - 3, மமக - 1, கொமதேக - 2 ஆகிய வார்டுகளை வென்றுள்ளது. மாறாக அதிமுக வெறும் 3 வார்டுகளை மட்டுமே இங்கு வென்றுள்ளது. 10 எம்எல்ஏக்கள், எஸ்பி வேலுமணி போன்ற வலுவான தலைவர்களை வைத்துக்கொண்டு கோவையில் அதிமுக இப்படி ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. முன்னதாக கோவையில் ஒருவேளை திமுக வெற்றிபெற்றால் செந்தில் பாலாஜிக்கு கண்டிப்பாக பெரிய பதவி கிடைக்கும் என்று முன்பே ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.

பதவி
அதன்படியே நேற்று கோவை வெற்றிக்கு பின் செந்தில் பாலாஜிக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் கால் செய்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கோவை நிர்வாகிகள் சிலரும் கசப்பை மறந்து செந்தில் பாலாஜிக்கு போன் செய்து பாராட்டி உள்ளனர். திமுகவின் டாப் நிர்வாகிகள் செந்தில் பாலாஜியின் இந்த ரிசால்ட்டால் உற்சாகத்தில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலினும் நேற்று செந்தில் பாலாஜியை தனியாக போனில் அழைத்து வாழ்த்தி இருக்கிறார்.

செந்தில் பாலாஜி ஸ்டாலின்
சொன்னபடியே கோவை கிளீன் ஸ்வீப் செய்துள்ளீர்கள் என்று கூறி செந்தில் பாலாஜியை முதல்வர் பாராட்டி இருக்கிறாராம். அதோடு உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரும் செந்தில் பாலாஜியை தனிப்பட்ட வகையில் வாழ்த்தி இருக்கிறார்களாம். இந்த நிலையில் விரைவில்.. செந்தில் பாலாஜிக்கு கட்சிக்குள் ஒரு முக்கிய பதவி.. கவுரவ பதவி அல்லது வேறு ஏதாவது ஒரு விதமான பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு மேற்கு மண்டலத்தில் சில பதவி மாற்றங்களும் வரலாம் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications