"11 கோடி பேர்.." டாப் இடத்தில் தமிழ்நாடு! அதுவும் யாருமே எதிர்பார்க்காத இந்த துறையில்.. அப்படி போடு
கோவை: தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சுற்றுலாத் துறையில் டாப் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாகச் சுற்றுலாத் துறை இருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சுற்றுலாத் துறை அப்படியே முடங்கிப் போனது.
கொரோனா இப்போது தான் முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. இதனால் கடந்தாண்டே சுற்றுலாத் துறையே மீண்டு வரத் தொடங்கிவிட்டது.

அமைச்சர் ராமச்சந்திரன்
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.. கோவை வாலங்குளம் படகு இல்லம், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்..

வெளிநாடு சுற்றுலாப் பயணிகள்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், "சுற்றுலாத்துறை என்பது இயற்கை நமக்குக் கொடுத்த வரப்பிரசாதமாக உள்ளது. தமிழ்நாட்டில் கோயில்கள் அதிகமாக உள்ளதே இதற்கு முக்கிய காரணம்.. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வருகின்றனர்.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 12.50 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள கோவில்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பாரம்பரியத்தை ஆர்வத்தோடு கண்டு களித்து வருகின்றனர்.

11 கோடி பேர்
அதேபோல உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 11 கோடி உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இந்தியாவிலேயே சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு தான் டாப் இடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று சுற்றுலாத்துறை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

கோவை சுற்றுலா
கோவை மாவட்டத்தில் பார்த்தோம் என்றால் இங்குப் பொழுதுபோக்கிற்கு இடமில்லை. இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இங்கு மக்கள் பொழுதைக் கழிக்கும் வகையிலான இடங்கள் ஏற்படுத்தப்படும். சென்னையில் படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றை மேம்படுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து வருகிறோம்.

ஊட்டி
அதேபோல ஊட்டியில் உள்ள படகு இல்லம் பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களில் கூடுதல் வசதிகள் செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுலாத்துறையை என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பகுதிகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications