திமுக ஆட்சியில் 150 இந்து கோவில்கள் இடிப்பு- தமிழகம் காஷ்மீர் போல மாறிவிட்டது: எச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுக ஆட்சியில் 150 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன; தமிழகம் காஷ்மீர் போல மாறிவிட்டது என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

    கோவை : திமுகவிற்கு வாக்களித்தவர்கள் புலம்புகின்றனர்… ஹெச்.ராஜா கடும் விமர்சனம்!

    கோவையில் இன்று செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது: திமுக எல்லா துறைகளில் தோற்றுவிட்டது. திமுகவுக்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

    மழை வெள்ளத்தை சமாளிக்க முடியமால் தோற்ற அரசு திமுக அரசு. மக்களை திசை திருப்பும் நோக்கில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    காஷ்மீராகும் தமிழ்நாடு

    காஷ்மீராகும் தமிழ்நாடு

    அரசின் உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கைது செய்து வருகிறது திமுக அரசு. திமுக ஆட்சியில் 150 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பட்டா நிலத்தில் இருக்க கூடிய கோவிலும் இடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் போன்று தமிழ்நாடு உள்ளது.

    ஆதாரம் இருக்கு

    ஆதாரம் இருக்கு

    பிபின் ராவத், மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசியவர்களின் ஆதாரங்கள் வைத்திருக்கிறோம். அத்தகைய தேச விரோதிகளை கைது செய்ய வேண்டும். காவல்துறை ஏவல்துறையாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக சொல்லியிருக்கிறார். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் சொத்து விவரங்களை தலைமை செயலாளர் கேட்டிருப்பது வரவேற்ககூடியது.

    சர்ச்சை கூடாது

    சர்ச்சை கூடாது

    விமான விபத்து குறித்து கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியவரும். அதற்கு முன்பு சர்ச்சை கூடாது. பாஜகவினர் கூடினால் கொரோனா பரப்புவதாக வழக்கு பதியப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடும் நிகழ்வுகளில் கொரோனா பரவுவது இல்லையா? கிறிஸ்மஸ் அன்று வெளிநபர்களுக்கு தேவாலயங்களுக்குள் அனுமதியில்லை என்று கூறுவதற்கு இந்த அரசுக்கு முதுகெலும்பு உள்ளதா? தமிழக நிதி அமைச்சர் வேலை பார்த்த இடங்கள் விளங்கியதில்லை என்கிறார்கள்.

    திமுக அரசு தோல்வி

    திமுக அரசு தோல்வி

    மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே மாநிலத்தில் நடைபெறுகிறது. திமுக அளித்த வாக்குறுதி திட்டங்களை ஒன்றையும் செயல் படுத்துவது இல்லை. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

    ஆளுநரிடம் பாஜக புகார்

    ஆளுநரிடம் பாஜக புகார்

    தமிழகத்தில் பாஜகவின் ஐடிவிங்கை சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சந்தித்து தமிழக அரசு மீது புகார் கொடுத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+