டாஸ்மாக்கில் கூடுதல் கட்டண பிரச்சனை.. இனி உயரதிகாரிகளுக்கும் செக்.. அமைச்சர் விக்னேஷ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாக போகிறது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போதும் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் இனி உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.

கோவையில் மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "முன்பிருந்த அமைச்சர்கள் தொழில் நடத்துவோரின் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் சொல்வார்கள். அதிகாரிகள் சொல்வதை அப்படியே தொழில்துறையினரிடம் சொல்வார்கள். இந்த நடைமுறை தான் இருந்தது. நாங்கள் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவர்கள். சாலை தரம் எப்படி இருக்கிறது, குடிநீர் வசதி உள்ளதா, மழைநீர் வடிகால் உள்ளதா, தெருவிளக்கு வசதி உள்ளதா உள்ளிட்ட கள நிலவரங்களை தெரிந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று விசாரித்தோம்.

Tasmac

உரிய ஆவணங்களுடன் புகார்

இந்த ஆய்வில் சில விஷயங்கள் தெரிந்து கொண்டோம். டாஸ்மாக்கில் தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுத்து கொண்டே தான் இருப்போம். கூடுதல் பணம் வாங்குவதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். அதில் சமரசமே செய்ய மாட்டோம். இந்த அரசு அதில் பொறுத்து போகாது. சிலர் கடை ஊழியர்களிடம் வேண்டுமென்றே பணம் பறிக்கும் நோக்கில் வீடியோ எடுத்து பரப்புவதாக புகார் வருகிறது. பணம் பறிப்பது தொடர்பாக உரிய ஆவணங்களுடன் புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். நல்லது செய்யும் போது, நமக்கு பல இடங்களில் இருந்து அழுத்தம் வருவது இயல்பு தான். என்னை மாற்ற கூட சிலர் அழுத்தம் கொடுப்பதாக வரும் தகவல் உண்மையா என தெரியவில்லை. அவர்களால் முடிந்ததை செய்யட்டும். பார்த்துக் கொள்ளலாம். எந்த மாவட்டத்தில் மதுபானம் கூடுதல் விலையில் விற்பனை பிரச்சனை எழுகிறதோ, அதற்கு மேற்பார்வையாளர், விற்பனையாளர் மட்டுமே பொறுப்பாக மாட்டார்கள்.

உயரதிகாரிகள் மீதும் நடவடிக்டிகை

மாவட்ட மேலாளர்களுக்கும் சம பொறுப்பு உள்ளது. தவறு நடக்கும் பட்சத்தில் இனி அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை குறித்து மின்சாரத்துறை அமைச்சரிடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கும். திமுகவினர் முதலமைச்சர் குறித்து மரியாதைக்குறைவாக பேசியதை கடுமையாக கண்டிக்கிறோம். இது தொடர்பான கேள்விகளுக்கு கட்சி செய்தி தொடர்பாளர்கள் பதில் அளிப்பார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+