கோவையில் நீடிக்கும் பதற்றம்..போலீஸ் குவிப்பு.. தலைமைச் செயலர் இறையன்பு பரபர ஆலோசனை..144 தடை வருமா?
கோவை: பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்களினால் கோவையில் பதற்றம் நீடிக்கிறது. கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தலைமைச்செயலர் இறையன்பு காணொலி மூலம் மேற்கு மண்டலா ஐஜி சுதாகர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை காந்திபுரம் வி.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மர்ம நபர்களால் வீசப்பட்ட அந்த குண்டு வெடிக்கவில்லை. மேலும், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மீதும் மர்ம நபர்கள் பாட்டில் குண்டு வீசினர்.
குனியமுத்தூர் முத்துச்சாமி சேர்வை வீதியில் உள்ள இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து சென்றுள்ளனர்.

வாகனங்கள் சேதம்
பொள்ளாச்சி பாஜக நிர்வாகியின் காரின் கண்ணாடியை கோடாரியால் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அவரது வீட்டு முன்பு டீசல் நிரப்பிய 3 பிளாஸ்டிக் பைகளும் சிதறி கிடந்தன. குமரன்நகரில் வசிக்கும் பாஜ பிரமுகர் சிவக்குமார் என்பவர் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த அவரது காரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கற்களால் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அந்த காரிலும் டீசல் நிரப்பிய பாக்கெட்டுகள் கிடந்தன. கார்களை உடைத்துவிட்டு டீசல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடைகளில் பெட்ரோல் குண்டு வீச்சு
அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சரவணன்குமார் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆட்டோக்களின் கண்ணாடியையும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டன. இதே போல மேட்டுப்பாளையத்தில் பிளைவுட் கடையிலும், ஈரோட்டில் பர்னிச்சர் கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

கோவையில் பதற்றம்
அடுத்தடுத்து நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவியது.
கோவை மாநகர உளவுத்துறை ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கநல்லூர் துணை ஆணையர் அருண் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆணையராக நியமனம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போலீசார் குவிப்பு
இந்தநிலையில் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக வெள்ளலூரில் உள்ள அதிவிரைவுப்படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக 4 கம்பெனி சிறப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆத்துப்பாலம் மற்றும் காந்திபுரத்தில் அதிவிரைவுப்படை போலீசார் துப்பாக்கி, கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் உள்ளிட்டவற்றுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பாதுகாப்பு
அதிரடிப்படை காவலர்கள் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கோவை தெற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம், பாஜக அலுவலகம், முக்கிய பள்ளி வாசல்கள் மற்றும் இந்து அமைப்புகளின் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

உஷார் நிலை
மாநகரில் உள்ள 11 சோதனைச்சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. மாநகரில் இருந்து வெளியே செல்லும் மற்றும் உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 11 சோதனைச்சாவடிகள் தவிர்த்து மாநகருக்கு வரும் பிற சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குண்டர் சட்டம் பாயும்
கோவை மாநகரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்வபத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஒவ்வொரு சம்பவத்திற்கும் தலா 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேற்கு மண்டல ஐஜி ஆலோசனை
இதனிடையே கோவையில் மேற்கு மண்டலா ஐஜி சுதாகர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையர் பங்கேற்றுள்ளனர். கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இறையன்பு ஆலோசனை
கோவையில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு கோவையில் உள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நிலைமையை கேட்டறிந்தார். கோவையில் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications