ஓலா ஸ்கூட்டர் வாங்காதே.. 100 கிலோ மீட்டர் கூட ஓடல.. பொங்கிய பொள்ளாச்சி மக்கள்
கோவை: ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அடிக்கடி சாலையிலேயே பற்றி எரிந்து வருவதாலும், பல்வேறு பழுதுகள் ஏற்படுவதாலும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கர்நாடகா, பெங்களூர், மதுரை, கரூரைத் தொடர்ந்து பொள்ளாச்சி மக்களையும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொந்தளிக்கச் செய்துள்ளது. ஓலா வண்டியை வாங்காதீர்கள் என்று போராட்டத்தில் குதித்த பொள்ளாச்சி மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையில் தனி முத்திரயைப் பதித்து வந்தது ஓலா நிறுவனம். தொடக்கம் முதலே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக பெட்ரோல் செலவு மிச்சம், இயற்கைக்கும் உகந்தது என்று கருதியே வாங்கத் தொடங்கினர். ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது.

ஓராண்டில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. விற்பனையில் சாதனை, மக்கள் வரவேற்பு என சூப்பர் மோடில் சென்று கொண்டிருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது கடந்த சில மாதங்களாக பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், சில சமயங்களில் இந்த பழுதுகளால் தீ விபத்து உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அண்மையில் கூட பெங்களூரில் ஓலா பைக்கை வாங்க வேண்டாம் என்று ஓலா ஸ்கூட்டரில் பதாகை வைத்து பொதுமக்களுக்கு பெண் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல, கர்நாடகாவில் எலெக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை முறைப்படி சரிசெய்யாததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் ஓலா ஷோரூமை பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவமும் நடந்தது. கரூர், மதுரையிலும் ஓலா பைக்குகள் நடு ரோட்டில் பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கர்நாடகா, பெங்களூர், மதுரை, கரூரைத் தொடர்ந்து பொள்ளாச்சி மக்களையும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொந்தளிக்கச் செய்துள்ளது. ஓலா வண்டியை வாங்காதே, ஏமாறாதே, தடை செய் தடை செய் என்று போராட்டத்தில் குதித்த பொள்ளாச்சி மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது சின்னம்பாளையம். இப்பகுதியில் ஓலா இருசக்கர வாகனம் விற்பனை மையம் முன்பு இன்று குவிந்த மக்கள் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பத் தொடங்கினர். வாங்காதே வாங்காதே.. ஓலா வண்டியை வாங்காதே.. தடை செய் தடை செய் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஓலா வாடிக்கையாளர்கள் கூறுகையில், சின்னம்பாளையத்தில் உள்ள ஷோரூமில் தான் ஓலா இருசக்கர வாகனங்களை வாங்கினோம். வாகனத்தை வாங்கியதில் இருந்து அடிக்கடி பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. புதிய வாகனத்தை சர்வீஸ் செய்தும் பார்த்துவிட்டோம். ஆனாலும் பழுது பிரச்னைகள் ஓய்ந்த பாடில்லை. மீண்டும் மீண்டும் பழுதாகிக் கொண்டே இருக்கிறது.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்தாலும் அந்தப் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தொடர்ந்து, புகார்களை புறக்கணித்து வருகின்றனர். இதனால்தான் ஓலா ஸ்கூட்டரை வாங்கிய பலரும் ஒன்றிணைந்து தர்ணாவில் ஈடுபட்டோம் என்றனர்.
இதுகுறித்து மற்றொரு வாடிக்கையாளர் கூறுகையில், ஓலா ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்கான எந்தவொரு சர்வீஸ் சென்டரும் இல்லை. வாகனத்தை வாங்கி 100 கிலோமீட்டர் கூட ஓடவில்லை. எங்கு சென்றாலும் அங்கேயே ரிப்பேர் ஆகி நின்றுவிடுகிறது. தொடர்ந்து நாங்களும் சர்வீஸ் செய்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், ஓலா நிர்வாகத்தினர் உடனடியாக சர்வீஸ் செய்தும் கொடுப்பதில்லை. அப்படி அவர்கள் சர்வீஸ் செய்து கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் வாகனம் பழுதாகிக் கொண்டே தான் இருக்கிறது. எனவே, இந்த வாகனங்களை ஓலா நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications