அன்று 'நான் யார் தெரியுமா.. கனிமொழி எம்பி பிஏ ஓட தம்பி'.. இன்று மன்னிப்பு கேட்டு வீடியோ
கோவை: கோவையில் திமுக கனிமொழி எம்.பி. பி.ஏ.வின் தம்பி என்று கூறி மதுபோதையில் போலீசாருடன் இளைஞர் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி இருந்தது. இதைடுத்து திமுக எம்பி கனிமொழியின் பெயரை காவல்துறையிடம் தவறாக பயன்படுத்தியதற்காக இளைஞர் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். முன்னதாக கோவை 100 அடி சாலையில் மதுபோதையில் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, வாக்குவாதம் நடந்தது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் போலீசார் தினமும் வாகன சோதனை நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல் 100 அடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக வேகமாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த காரில் மொத்தம் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை போலீசார் காரில் இருந்து கீழே இறங்குமாறு கூறியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், 'நான் திமுக எம்பி கனிமொழியின் பி.ஏ அவர்களுடைய தம்பி. நாங்க வந்த காரும் அவருடையது தான். நீங்கள் அவரிடம் பேசுங்கள்' என போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதனிடையே கனிமொழியின் பி.ஏ அவர்களுடைய தம்பி என்று போலீசாரை மிரட்டி, ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது, காந்திபுரத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பொள்ளாச்சியில் இருந்து வந்த 25 வயதாகும் கிரண், 27 வயதாகும் பாலாஜி மற்றும் 24 வயதாகும் சிவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே திமுக எம்.பி. கனிமொழியின் பெயரை காவல்துறையிடம் தவறாக பயன்படுத்தியதற்காக இளைஞர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அந்த இளைஞர் கூறுகையில், வணக்கம் என் பெயர் கிரண், நானும் எனது நண்பர்களும் நேற்று பொள்ளாச்சியில் கோவைக்கு தனிப்பட்ட வேலைக்காக வந்திருந்தோம்.. எங்கள் வேலையை முடித்துவிட்டு, கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு போகும் போது, நான் மதுபோதையில் இருந்தேன்.
அப்போது போலீஸ் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தடுத்து நிறுத்திய போது, போலீசாரிடம் தவறான வார்த்தைகளை பேசிவிட்டேன்..அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் திமுக எம்பி கனிமொழி அவர்களின் பெயரை பொதுவெளியில் பயன்படுத்தியது தவறு தான். அவருடைய பிஏ யார் என்றே எனக்கு தெரியாது.. எனக்கு அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. தெரிந்தவரிடம் கொடுத்துதான் இப்படி பேசச்சொன்னேன்.. அதற்கும் மன்னிப்பு கேட்கிறேன்.. பொதுவெளியில் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதற்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த இளைஞர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications