மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு .. எப்படி பார்க்கலாம்
கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பின்னர், தமிழ்நாடு முழுவதும கோவில்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை பலர் வரவேற்றனர். எனினும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் விவரம் வெளியாகவில்லை. இந்த சூழலில், , கியூஆர்கோடு வடிவில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளுடன் கூடிய விவரம் வெளியாகி உள்ளது.
நேற்று காலை தமிழக சட்டமன்றத்தில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், 717 கடைகள் மூடப்பட்டது தொடர்பான முழுமையான விவரங்கள் நிச்சயம் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது மூடப்பட்ட அனைத்து 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளுடன் கூடிய முழுமையான பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் மூடப்பட்ட 717 கடைகளும் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டு வந்தன என்பது குறித்த முழுமையான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கடையின் மாவட்டம், பகுதி, கடை எண் மற்றும் கடை செயல்பட்டு வந்த முழுமையான முகவரி ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியல், அரசாணை எண் 129-ன் அடிப்படையில் 717 கடைகள் மூடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. பட்டியலில் முதல் கடை முதல் 717-வது கடை வரை வரிசை எண்ணுடன் விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கியூஆர்கோடு ஸ்கேன் செய்து அறிய முடியும்.
இதில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மூடப்பட்ட 71 டாஸ்மாக் கடைகளின் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கோவை வடக்கில் 48 கடைகளும், தெற்கில் 23 கடைகளும் மூடப்பட்டுள்ளன. கோவை வடக்கில் வீரபாண்டி பிரஸ்காலனி, ஆனைக்கட்டி ரோட்டில் உள்ள மாங்கரை, கணுவாய் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம், அன்னூர் கே.சி.கே. தோட்டம், காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதுதவிர காளப்பட்டி ஷார்ப் நகர், சிந்தாமணிபுதூர், ஆவாரம்பாளையம், அரசமரம் வீதி, காந்திபுரம் நேரு வீதி, ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கிறது.
மேலும் கோவை மாநகரில் அவினாசி ரோட்டில் பீளமேடு, ஹோபாகாலேஜ், சுங்கனூர் கண்ணுசாமி கவுண்டர் வீதியில் 2 கடைகள், சவுரிபாளையம் சந்திரகாந்தி நகர், காளப்பட்டி நேரு வீதி, லஜபதிராய் ரோடு, ராம் நகர் காளிங்கராயர் வீதி, ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு, கவுண்டம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்தள்ளது. அதேபோல் வெங்கிட்டாபுரம், என்.எஸ்.ஆர்.ரோடு, நியூ சிந்தாமணிபுதூர் கிருஷ்ணராயபுரம், சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோடு, உடையாம்பாளையம், ராம்நகர், அவினாசி ரோடு சித்ரா உள்ளிட்ட இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
கரட்டுமேடு, குருடம்பாளையம், வெள்ளக்கிணறு திருவள்ளுவர் வீதி, சுங்கனூர், லாலி ரோடு, அலமேலு மங்கம்மா நகர், வி.சி.வி. ரோடு, கீரணத்தம் ரோடு, சுங்கனூர் கண்ணுசாமி வீதி, தெலுங்குபாளையம், கலைவாணி பிரஸ் வீதி, சலிவன் வீதி, தேவ பள்ளி, கோல்டுவின்ஸ், மேட்டுப்பாளையத்தில் பஸ் நிலையம் அருகில், ஊட்டி ரோடு, மார்க்கெட் ரோடு விரிவாக்கம், உழவர் சந்தை ரோடு, காரமடை, திம்மம்பாளையம், கணபதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது.
கோவை தெற்கினை பொறுத்தவரை டவுன்ஹால், சூலூர் பட்டணம், புலியகுளம்-ராமநாதபுரம் ரோடு, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு, வால்பாறை நகரம், போதம்பாட்டி, சிங்காநல்லூர், ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோடு, ஒலிம்பஸ், பூமார்க்கெட், சாரதா மில்ரோடு அரசன் தியேட்டர், போத்தனூர்-சாரதா மில்ரோடு, வைசியாள் வீதி, புலியகுளம், கந்தசாமி போலீஸ் வீதி, சின்னியம்பாளையம் ஆகிய இடங்களில் மூடப்பட்டிருக்கிறது. சுந்தராபுரம் சிட்கோ காலனி, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, கோட்டூர் ரோடு, உக்கடம் ராஜா தியேட்டர், பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ரோடு, ஏ.டி.சி. தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications
