திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீஸ்.. வீட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆணுறைகள்..!
திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீசார் ஆணுறைகளை கைப்பற்றினார்கள்.
Recommended Video

கோவை: திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் ஏராளமான ஆணுறைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
400 பெண்களை சீரழித்தவர்களில் கைதானவர்கள் 4 பேர்! அந்த 4 பேரில் திருநாவுக்கரசுதான் கேங் லீடர்! பண்ணை வீட்டுக்கு சென்ற ஏராளமான இளம் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் மற்றும் கார் வாங்கி விற்பனை செய்வதுதான் திருநாவுக்கரசின் வேலையே!

அழகான பெண்கள்
ஆனால் இதெல்லாம் பார்ட் டைம் ஜாப் போல இருக்கிறது. அழகான பெண்கள் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அவர்களிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கி அதை சபரியிடம் தருவதுதான் திருநாவுக்கரசின் முக்கியமான வேலை.

வீடியோ எடுப்பார்கள்
சபரி அந்த நம்பரில் பேசி, மயக்கும் வார்த்தைகளை பேசி வலையில் வீழ்த்திவிடுவாராம். சபரி என்ற பெயர் இளம் பெண்களிடம் சொல்ல தயங்கி, தன் பெயரை ரிஷ்வந்த் என ஸ்டைலாக மாற்றி வைத்து கொண்டார். சிக்கிய இளம் பெண்களை சபரி திருநாவுக்கரசு பண்ணை வீட்டுக்கு அழைத்து வருவார். அங்குதான் எல்லா பலாத்கார கன்றாவிகளும் நடந்துள்ளன. கற்பழிப்பு நடக்க.. நடக்க.. சபரியின் நண்பர்கள் இதை மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள்!

பண்ணை வீடு
ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில்தான் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. இந்த பங்களாவில் நேற்று மாலை போலீசார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றதாகவும், ஆனால் பண்ணை வீடு பூட்டியிருந்ததாகவும் தெரிகிறது.

ஆணுறைகள்
அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஏராளமான பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக அந்த வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகளை இந்த கும்பல் வாங்கி வைத்திருந்ததை பார்த்ததும் போலீசார் ஷாக் ஆகிவிட்டார்களாம். அந்த பண்ணை வீட்டை சுற்றிலும் ஆணுறைகள் சிதறி கிடந்ததாம்! இந்த விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டார்களாம்.
பொள்ளாச்சி விஷயத்தில் போலீசார் துரிதமான செயல்களில் இறங்கி விசாரணையை ஆரம்பித்துள்ளனர். போலீசாரால் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கையில் ஒன்றுதான் இந்த பண்ணை வீட்டு சோதனை என்பதும்!

ஆவணங்கள்
அதேபோல, வழக்கு விசாரணை நடக்கும்போது அது சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியில் சொல்லக்கூடாது என்பதும் போலீசாரின் முக்கிய கடமை ஆகும். எனினும் கிடைக்கப்பட்ட அனைத்து விவரங்கள், தகவல்கள், ஆவணங்களை விரைவில் போலீசார் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications