எங்கே திருநாவுக்கரசின் தோழி.. அவரை பிடித்தால் மொத்தமும் சிக்கும்.. தனிப்படை அமைத்து தீவிர தேடுதல்
Recommended Video

கோவை: இந்த ஒரு பெண்ணை கண்டுபிடித்துவிட்டால் போதும்.. மிச்சமுள்ளவர்கள் தானாக சிக்குவார்கள் என்று திருநாவுக்கரசுவின் தோழியை தேடும் படலம் ஆரம்பமாகி உள்ளது.
400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கிய திருநாவுக்கரசுக்கு ஒரு பெண் தோழி இருக்கிறார் என்றால் நம்பவே முடியவில்லை.
7 வருடமாக, 1500 ஆபாச வீடியோ எடுத்தவனுடன் ஒரு பெண்ணுக்கான நட்பு எந்த அடிப்படையில் இருந்திருக்கும், அல்லது இவனிடம் எப்படி அந்த பெண் நட்புடன் பழகி இருப்பார் என்ற பலமான, ஆச்சரியமான சந்தேகம் எழுந்துள்ளது.

கல்லூரி நட்பு
கோவையில் உள்ள பிரைவேட் காலேஜில் எம்பிஏ., படிக்கும்போதுதான் அந்த பெண்ணின் நட்புகிடைத்துள்ளது. அவரும் அதே காலேஜ்தான். சேலத்தை சேர்ந்தவராம்!

நைசாக பேசுவார்
பெண்களிடம் பேசி மயக்க, அவர்களின் செல்போன் நம்பர் வேண்டும் என்றால் திருநாவுக்கரசு இந்த தோழியிடம்தான் கேட்பாராம். அந்த தோழியும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசி நைசாக நம்பவரை வாங்கி வந்து திருநாவுக்கரசுவிடம் தருவாராம். அப்பறம் மற்ற வேலைகள் வேக வேகமாக ஆரம்பமாகுமாம்.

அடைக்கலம்
அது மட்டும் இல்லை, போலீசிடமிருந்து தப்பிக்க திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த சமயத்தில், இந்த தோழிதான் உதவியிருக்கிறாள். திருநாவுக்கரசு தங்குவதற்காக அடைக்கலம் தந்ததும் இந்த தோழியேதானாம்!

தனிப்படை
திருநாவுக்கரசு அரெஸ்ட் என்றதும் இப்போது தோழி எஸ்கேப்! எங்கே என்று தெரியாததால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காகவே இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காமுகர்கள்
சேலம் சொந்த ஊர் என்பதால், ஒருவேளை தோழி அங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு போலீசார் அங்கும் விரைந்திருக்கிறார்கள். அந்த ஒரு பெண்ணை கண்டுபிடித்துவிட்டால், எத்தனையோ பெண்களை நாசம் செய்த காமுகர்களின் விவரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் நம்பப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications