கோவையில் மட்டன் குழம்பில் காதலனை காலி செய்த பெண்.. தூத்துக்குடியில் இப்படியொரு மனைவியா? நம்ப முடியல

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை டிராவல்ஸ் அதிபர் கொலையில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. குடும்ப வன்முறைகளும், கள்ளக்காதல் அட்டூழியங்களும் அதிகரித்து வரும் சூழலில், இந்த தூத்துக்குடி சம்பவம் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை போலீசார் திட்டமிட்டு உள்ளனர். என்ன நடந்தது?

தூத்துக்குடியை சேர்ந்தவர் தியாகராஜன்.. 69 வயதாகிறது. கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் தியாகராஜன் வசித்து வந்தபோது, கோமதி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. கோமதிக்கு நிலா மற்றும் சாரதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

Coimbatore Kovai Thoothukudi

வாக்குவாதம் - தகராறு

இதில், சாரதாவுக்கு திருமணமாகிவிட்டது.. இவருடைய கணவர் பெயர் குணவேல். ஆனால், சாரதாவுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்த காரணத்தினால், கடந்த 2016ல் தியாகராஜன் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போனார்.. பிறகு இந்த வழக்கில் தியாகராஜன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையே, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சாரதா துபாயில் ஓட்டல் வேலைக்கு சென்றார். அங்கு தஞ்சையை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சிகாமணி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.. தன்னுடைய சொந்த ஊரில் சிகாமணி வீடு கட்டுவதால், ரூ.5 லட்சம் ரூபாயை சாரதாவிடம் வாங்கியிருந்தார்.. ஆனால், அந்த பணத்தை சாரதாவுக்கு சிகாமணி திருப்பி தரவில்லை என தெரிகிறது. எனவே, இதுவே இருவருக்கும் வாக்குவாதமாக மாறிவிட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிகாமணி, சாரதாவை தாக்கியிருக்கிறார்.

போலீஸ் புகார்

இதையடுத்து சாரதா அங்குள்ள போலீஸில் புகார் தந்துவிட்டு, பிறகு கோவைக்கு வந்துவிட்டார்.. சிகாமணி தன்னை தாக்கியது சம்பந்தமாகவும், 5 லட்சத்தை வாங்கி கொண்டு திருப்பி தராதது குறித்தும், தன்னுடைய அம்மா கோமதியிடமும், தியாகராஜனிடமும் சொல்லி உள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கோமதியும், தியாகராஜனும், சிகாமணியையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள..

இதனிடையே, துபாயிலிருந்து கோபித்துக் கொண்டு கோவைக்கு வந்த சாரதாவை தேடி, சிகாமணி வந்துவிட்டார். கோவையிலேயே வீடு ஒன்று வாங்கி தருவதாக சாரதாவை சமாதானம் செய்தார்..

சாரதா சமாதானம்

ஆனால், சமாதானமாகாத சாரதா, சிகாமணியை கொல்வதற்கு ஏற்கனவே எடுத்திருந்த முடிவில் உறுதியாக இருந்தார்.. சம்பவத்தன்று, சிகாமணியிடம் வீடு பார்க்கலாம் என்று சொல்லி சாரதா தரப்பினர் முயன்றுள்ளனர்.. பெரியநாயக்கன்பாளையம், காரமடை, துடியலூர் ஆகிய பகுதிகளுக்கு வீடு பார்க்க காரில் அழைத்து செல்லும்போது, கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.

எனவே, கடந்த 22ம் தேதி வீட்டிலேயே விஷம் வைத்து கொல்வது என்று முடிவெடுத்தார்கள்.. இதற்காக மதுபானமும், மட்டனும் வாங்கி வந்தனர்.. இதில், மட்டன் சமைத்து, அதில் 30- க்கும் மேற்பட்ட தூக்க மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை கலந்தனர்.. அந்த உணவை சாப்பிட்ட சிகாமணி அங்கேயே சுருண்டு விழுந்தார்..

பீளமேடு போலீஸ்

நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதி பாண்டியன், அவனது கூட்டணி புதியவன் என்பவரை இதற்காகவே கோவைக்கு முன்கூட்டியே வரவழைத்திருந்தனர்.. இவர்களது உதவியுடன், சிகாமணியின் சடலத்தை கார் டிக்கியில் வைத்து கரூர் பொன்னமராவதியை அடுத்த கே.பரமத்தி என்ற பகுதிக்கு கொண்டு சென்று சாரதா உள்ளிட்டோர் அந்த உடலை வீசிவிட்டார்கள்..

ஆனால், தன்னுடைய கணவனை காணவில்லை என்று சிகாமணியின் மனைவி பிரியா பீளமேடு போலீசில் புகாரளிக்கவும், இந்த விஷயம் வெடித்து கிளம்பியது.. இறுதியில், இந்த கொலை தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் தியாகராஜன் (69), புதியவன்(48), தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதி(53), மகள் நிலா(33), உறவினர் சுவாதி (26) மற்றும் சாரதா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்..

6 பேரிடமும் போலீஸ் விசாரணை

இப்படிப்பட்ட சூழலில், கைதான கள்ளக்காதலி சாரதாவின் அப்பாவும், தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதியின் கணவருமான சண்முகத்தை சில ஆண்டுகளாகவே காணவில்லையாம்.. அவரின் கதி என்ன? என்பதும் தெரியவில்லையாம்..

அவருக்கும் ஏதேனும் அசாம்பாவிதம் நடந்திருக்குமோ? அவர் தற்போது எங்கே இருக்கிறார்? என்ற சந்தேகம் போலீசாருககு எழுந்துள்ளது. எனவே, கைதான 6 பேரையுமே காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அனுமதியை பெறப்போவதாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+