கூட்டணியை விட்டு சென்றவர்கள் செல்லாத காசு.. பாஜகவை கடுமையாக தாக்கிய அதிமுக மாஜி அமைச்சர்
கோவை: அதிமுக கூட்டணியை விட்டு சென்றவர்கள் செல்லாத காசு என்று பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் இவ்வாறு காட்டமாக விமர்சித்தார்.
அதிமுகவுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் சற்று அடங்கியிருந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது மீண்டும் அதிமுக - பாஜக மோதலுக்கு வித்திட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சிக்க பதிலுக்கு அண்ணாமலையும் காட்டமாக பதிலடி கொடுத்தார். இதனால், இரு தரப்பிலும் விரிசல் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் தற்போதைக்கு கூட்டணி இல்லை என்றும் தேர்தல் காலத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.
கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்த மறு நிமிடமே தமிழக பாஜக தலைவர்கள் பலரும் காட்டமாக அதிமுகவை விமர்சிக்க தொடங்கினர். பதிலுக்கு அதிமுக தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜகவை கடுமையாக சாடினார். பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:-
அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கையை 1.5 கோடியில் இருந்து 2.5 கோடியாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு வெற்றிகரமாக முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. சட்டமன்றத்திற்கும் அதோடு தேர்தல் வரலாம். எனவே தொண்டர்கள் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
அதிமுக கூட்டணியை விட்டு சென்றவர்கள் கிழிந்து இத்துப்போன செல்லாக்காசு. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் செல்லும் ரூபாய் நோட்டாக இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமியை வருங்கால முதல்வராக ஏற்றுக்கொள்கிறவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். அதிமுகவை எதிர்த்தவர்களின் எதிர்காலம் சூனியமாக இருக்கும்" என்று காட்டமாக பேசினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications