சூப்பர் சாதனை.. நீட் தேர்வில் வெள்ளியங்காடு அரசுப் பள்ளியில் படித்த 3 மாணவர்கள் தேர்ச்சி
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் பயின்ற 3 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் +2 தேர்வுகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 975 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மேலும்,வெள்ளியங்காடு பகுதியைச் சுற்றிலும் உள்ள சொடுக நஞ்சனூர், அன்சூர், குண்டூர், மானாறு உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து இப்பள்ளியில் 175 பழங்குடியின மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மொத்த ஐந்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இத்தேர்வில் தாரணி பிரியா என்ற மாணவி 169 மதிப்பெண்களும், ஷாகா ஸில்வானஸ் என்ற மாணவன் 150 மதிப்பெண்களும்,சரிகா என்ற மாணவி 122 மதிப்பெண்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அரசுப்பள்ளியில் பயின்று தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளி தலைமையாசிரியர் பெள்ளி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமதாஸ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications