கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!
கோவை: கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பாக ஐடி விங் இணைச் செயலாளர் மகேந்திரன் போட்டியிட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனுக்காக கோவை தெற்கு தொகுதியில் பணியாற்றியுள்ள மகேந்திரன், இம்முறை செந்தில் பாலாஜியின் ஆதரவு காரணமாக அந்த தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
2021 சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டிருந்தார். இருப்பினும் நூலிழையில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய வானதி சீனிவாசன் வென்றார். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மகேந்திரன். இவர் சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் திமுக பக்கம் வந்தார்.

இவர் திமுகவில் இணைந்த பின், அவருக்கு திமுக ஐடி விங் துணைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதனால் மகேந்திரனின் செல்வாக்கும் திமுகவில் உயரத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து மகேந்திரன் கோவையில் தொகுதி வாரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த முறை மகேந்திரன் தனக்கு சீட் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார். இதனால் கோவை தெற்கு தொகுதி மகேந்திரனுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. கோவை தெற்கு தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன் இம்முறை கோவை வடக்கு தொகுதிக்கு மாறப் போவதாக பேசப்பட்டு வருகிறது.
கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை சிறுபான்மை மக்கள், அருந்ததியர், கவுண்டர், நாயுடு மற்றும் முக்குலத்தோர் சமூக மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்த தொகுதியை கடந்த 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக் கொடுத்தது. ஆனால் 2 முறையும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதனால் இம்முறை திமுக நேரடியாக களமிறங்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் கோவை தெற்கு தொகுதியில் ராஜீவ் காந்தி போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மாணவரணி செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ள சூழலில், ராஜீவ் காந்திக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதேபோல் செந்தில் பாலாஜியின் ஆதரவும் மகேந்திரனுக்கு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கமல்ஹாசனுக்காக அந்த தொகுதியில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், மகேந்திரன் போட்டியிட்டால் கிட்டத்தட்ட வெற்றி நிச்சயம் என்று திமுக தலைமையும் கருதுகிறது. அதுமட்டுமல்லாமல் கோவையில் தவெக பிரிக்கும் வாக்குகளும் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சி தலைமை ஆலோசிக்கிறது.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications