வேலுமணிக்கு ஷாக்.. அப்போ விட்டது "10".. 9 மாசம் கழித்து தொண்டாமுத்தூர் பேரூராட்சியை தூக்கிய திமுக
கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் திமுக வென்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் 10 சட்டசபை தொகுதியிலும் திமுக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் எஸ் பி வேலுமணியின் சொந்த தொகுதியில் திமுக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்ரில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

தேரதல்
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூருக்குள்பட்ட பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி
அதில் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக பிடித்துள்ழளது. இரு வார்டுகளில் மட்டும் அதிமுக வென்றுள்ளது. இதன் மூலம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியை திமுக தன்வசப்படுத்திவிட்டது. இந்த தொண்டமுத்தூரின் எம்எல்ஏவாக இருப்பவர் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி. கடந்த சட்டசபை தேர்தலில் மேற்கு மண்டலத்தை திமுகவுக்கு விடாமல் அதிமுகவே வென்றது.

உள்ளாட்சி தேர்தல்
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் மேற்கு மண்டலத்தை எப்படியும் திமுகவின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக மாற்ற திமுக தலைமை வியூகம் வகுத்தது. அதன்படி எஸ்பி வேலுமணி, அதிமுகவின் கோட்டையாக உள்ள மேற்கு மண்டலத்தின் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி
கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டசபை இடைத் தேர்தலிலேயே செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளால் திமுக தலைமையை குளிர வைத்துவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த காரியத்தை கொடுத்தாலும் சிறப்பாக செய்து முடித்துவிடுவார் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். கடந்த சில மாதங்களாக மேற்கு மண்டலததில் முகாமிட்டிருந்தார் செந்தில் பாலாஜி. அதன்படி 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வென்றது.

அதிமுக- திமுக
இந்த நிலையில் மேற்கு மண்டல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுக- திமுகவிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. செந்தில் பாலாஜியை போல் எஸ் பி வேலுமணியும் தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லவர். இதனால் இந்த இருவரின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு யாருக்கு பலனை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு வேளை மேற்கு மண்டலத்தில் பெரும்வாரியான இடங்களில் திமுக வென்றால் திமுக தலைமையிடம் மனதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் வலுப்பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த வலியுறுத்தி வெளியூர் குண்டர்களை வெளியேற்றக் கோரியும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த 4 தினங்களுக்கு முன்னர் தர்னா போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் அவரது தொண்டாமுத்தூரிலேயே திமுக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications