நில்லுங்கண்ணாச்சி நில்லுங்க.. பதிலை சொல்லுங்கண்ணாச்சி சொல்லுங்க.. ஊட்டியைக் கலக்கிய இமான்!
இமான் அண்ணாச்சியுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
ஊட்டி: வந்தவங்க எல்லாம் ஊட்டியை சுத்தி பார்க்கிறாங்களோ இல்லையோ.. இப்போதைக்கு இமான் அண்ணாச்சியையே ரவுண்டு கட்டி வரவேற்று பேசி மகிழ்கிறார்கள்!
ஊட்டியில் இப்போது சீசன் ஆரம்பமாகி விட்டது. அதனால் வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருக்கிறார்கள் இதனால் ஊட்டியே நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.
இந்த சமயத்தில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சிக்காக இமான் அண்ணாச்சி ஊட்டி வந்துள்ளார். நேற்று கூட ரோஸ் கார்டன் அதாவது ரோஜாபூங்காவில் உள்ள மக்களிடம் கேள்வி கேட்பது மாதிரி ஷூட்டிங் நடந்தது.

பச்சைக்கொடி
அதேமாதிரி, இன்றைக்கும் ஷூட்டிங் எடுக்க ஊட்டி ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அவருடன் டிவி கேமரா குழுவும் வந்தது. ஊட்டி ரயிலில் ஏறி கொண்ட அண்ணாச்சி, ரயிலில் நின்றிருந்த கார்டுவிடம் பச்சைக்கொடியை வாங்கி வேக வேகமாக ஆட்டி, "இந்த வாரம் ஊட்டியிலிருந்து" என்று சொன்னார். ஆனால் அதற்குள் ரயில்வே போலீசார் ஓடிவந்து ஷூட்டிங் எடுக்க தடை சொன்னார்கள்.

சுற்றுலா பயணிகள்
அனுமதி வாங்கினோம், அனுமதி இல்லை என்று இரு தரப்பிலும் பேச்சு நடந்தது. ஆனால் நாளைக்கு முழு அனுமதியுடன் வருகிறோம் என்று படக்குழு சொல்லிவிட்டது. ஆனாலும் அண்ணாச்சியை பார்த்ததும் ரயிலில் ஏற, இறங்க வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆகிவிட்டனர்.

டிடிஆர் என்றால் என்ன?
குறிப்பாக என்சிசி மாணவிகள் ஏதோ ஊரிலிருந்து ஊட்டிக்கு வந்திருந்தனர். அவர்கள் அண்ணாச்சியை சுற்றிக் கொண்டனர். கேமரா இல்லாவிட்டால் என்ன, நானே கேள்வி கேட்கறேன் என்று சொல்லிவிட்டு அண்ணாச்சி அவர்களிடம்,"டிடிஆர் என்றார் என்ன?" என்று எல்லோரிடம் கேள்வி கேட்டு, குதூகலமாக்கினார்.

நாளை ஷூட்டிங்
கொஞ்ச நேரத்துக்கு அண்ணாச்சியுடன் செல்பிதான்! இன்றும் நாளையும் ஊட்டியில்தான் அண்ணாச்சிக்கு ஷூட்டிங். இருந்தாலும் சுற்றுலா பயணிகளின் பாச மழையில் நனைந்து வருகிறார் இமான் அண்ணாச்சி!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications