கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பிப்ரவரி 28 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சாய்பாபா காலனியில் மேம்பாலப் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலைகள், நேரம் குறித்த விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரம் என்றால் கோவை மாவட்டம் தான். தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவைக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கல்வி, தொழில், மருத்துவம், வியாபாரம் என பல்வேறு தேவைகளுக்காக இங்கு வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பிரதான பிரச்சனை என்றால் போக்குவரத்து நெரிசல் தான்.

coimbatore

கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் அதிகளவில் தொடர்ந்து மேம்பாலங்கள் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கு அனுமதி வழங்கியது. 1.2 கிமீ தூரத்திற்கு சுமார் 71 கோடி ரூபாய் மதிப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய் பாபா கோவில் வழியே வரக்கூடிய முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலம் அமைக்கும் பணியில் கான்கிரீட் தூண்களின் மீது ஜிடர் பீம்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

இப்பணிக்காக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 ஆம் தேதி வரை இரவு 11.00 மணி முதல் காலை 05.00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இருந்து கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் என்.எஸ்.ஆர் சாலை வழியாக திருப்பி விடப்படும். கவுண்டம்பாளையத்தில் இருந்து அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் வாகனங்கள் சங்கனூர் பாலம் அருகே உள்ள சங்கனூர் சாலை வழியாக திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+