கோவையில் நாளை மறுநாள் ரயில் போக்குவரத்து அடியோடு மாற்றம்.. போத்தனூர் வழியாக ரயில்கள்.. விவரம்
கோவை: நாளை மறுநாள் (ஜூன் 13) ஒரு நாள் மட்டும் கேரள வழியாக செல்லும் ரயில்கள், கோவை சந்திப்பு ரயில் நிலையம் வராமல் வடகோவை, போத்தனூர் வழியாகஇயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமான கோவையில் மிகப்பெரிய ரயில் நிலையம் இருக்கிறது. மிகப்பெரிய தொழில் நகரம் என்பதால், தினமும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயிலாக இருப்பதால் கேரளாவின் 90 சதவீதம் ரயில்கள், மங்களூர் பகுதி கர்நாடகா ரயில்களும் கோவை வழியாகவே செல்லும். கோவை ரயில் நிலையத்தை பொறுத்தவரை நகரின் மையப்பகுதியில் இருக்கிறது. இங்கு ஆறு நடைமேடைகள் உள்ளன. சுமார் 20 இருப்பு பாதைகளை உடைய தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் வரும் ஜூன் 13ம் தேதி தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அன்று ஒரு நாள் மட்டும் பெரும்பாலான ரயில்கள் கோவை சந்திப்பு ரயில் நிலையம் வராமல் வடகோவை, போத்தனூர் வழியாக ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை ரயில் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் மேற்கண்டவாறு மாற்றம செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம்-கோவை செல்லும் ரயில்கள் 13-ந் தேதி வடகோவை ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை ரயில் நிலையத்துக்கு இயக்கப்படாது.
கோவைக்கு இயக்கப்பட வேண்டிய ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ்(எண்:13352) போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். கோவை ரெயில் நிலையத்துக்கு வராது.
எர்ணாகுளம்-பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(எண்:12678) போத்தனூர்-இருகூர் வழியாக இயக்கப்படும். போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னை எழும்பூர்-மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ்(எண்:16159) இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களில் நிற்காது.இந்த ரயில் போத்தனூரில் தான் நின்று செல்லும்.
இதேபோல் ஷாலிமார்-திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ்(எண்:22642) இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் நிற்காமல் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
கன்னியாகுமரி-ஹிம்சாகர் செல்லும் எக்ஸ்பிரஸ்(எண்:16318) இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.டெல்லி-திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ்(எண்:12626) இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலும் போத்தனூரில் மட்டுமே நிற்கும்.
பெங்களூரு-எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(எண்:12677) இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையத்துக்கு வராது. இதுவும் போத்தனூர் ரயில் நிலையத்தில் மட்டுமே நிற்கும்" இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் கூறியுள்ளது. கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் தொழில் நுட்ப பணிகள் நடைபெறும் காரணத்தால் 13ம் தேதி ஒரு நாள் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அடுத்த நாள் முதல் வழக்கம் போல் கோவை சந்திப்பு ரயில் நிலையம் வந்துதான் செல்லும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications