இனி அந்தரத்தில் சைக்கிள் ஓட்டலாம்.. கோவையில் ஜிப்லைன் சோதனை ஓட்டம் நிறைவு! அட்வென்சருக்கு ரெடியா?
கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. இதனால் கோவை மக்கள் சாகச பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கலாம்.
இந்தியாவில் ‛ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ஏராளமான நகரங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மக்களை ஈர்க்கும் வகையில் அந்த நகரங்களை உருவாக்குவதே இந்த ‛ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பல நகரங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்று தான் கோவையாகும். கோவையும் ‛ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் கோவை மாநகர் என்பது புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் கோவை உக்கடம் குளத்தில் "ஜிப் லைன்" மற்றும் ஜிப் சைக்கிள் ரைட் செய்வதற்கான கம்பி பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
தற்போது இந்த பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இதனால் இந்த ஜிப்லைன், ஜிப் சைக்கிள் பாதையில் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் தலைமையில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. மனிதர்களின் எடைகளை தாங்குகிறதா? என்பது இந்த சோதனை ஓட்டம் மூலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் எந்த குறைபாடும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இன்னும் அடுத்த சில நாட்களில் இந்த ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் ரைடு என்பது மக்களின் பயன்பாட்டுக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகராட்சி சார்பில் முறையான அறிவிப்பு என்பது வெளியாக உள்ளது. அதன்பிறகு மக்கள் இதில் சாகச பயணம் செய்யலாம். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஜிப் லைனில் ஒரே நேரத்தில் 3 பேர் தொங்கியபடி செல்லவும், 3 பேர் சைக்கிளில் பயணம் செய்யவும் முடியும் என கூறப்படுகிறது.
#கோவை பெரிய குளத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் zip line சைக்கிள் பயண வசதி சிறப்பாக தயார் செய்யப்பட்டு வருகிறது. ₹62.17 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் தொலைவிற்கு பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவு @PTTVOnlineNews @CbeCorp @prathapmurugan #Coimbatore pic.twitter.com/cWaWZtCrHd
— கோவை பிரவீண் (PK) (@PT__journo__PK) September 11, 2023
மேலும் இதுபற்றி கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛கோவை உக்கடம் பெரியக்குளத்தில் மொத்தம் 200 மீட்டர் நீளத்தில் ஜிப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ‛ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது அட்வென்சர்ஸ் கேமாக இருக்கும் இந்த ஜிப் லைன் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிப் லைன், ஜிப் சைக்கிள் என்பது தண்ணீருக்கு மேல் நடக்க உள்ளது. இதனால் நிச்சயம் இது த்ரில் அனுபவத்துடன் மக்களை கவரும் வகையில் அமையும்'' என்றனர்.












Click it and Unblock the Notifications