109 ஜாதிக்கு துரோகம் செஞ்சுட்டு 'தெக்க வருகிறார்' எடப்பாடி பழனிசாமி-டிடிவி தினகரன் கடும் பாய்ச்சல்
கோவை: லோக்சபா தேர்தல் நெருங்குவதால்தான் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பசும்பொன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார் என சாடியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
கோவையில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: 2 ஆண்டுகளாக பசும்பொன் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி போகவில்லை. இதற்கு காரணம் 2021 தேர்தலின் போது, தவறான ஆட்சியால் இனி ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது வட தமிழகத்து மக்களை ஏமாற்றுவதற்காக வன்னியப் பெருங்குடி மக்களை ஏமாற்றுவதற்காக 10.5% உள் இடஒதுக்கீடு என அறிவித்திருந்தார். அது நீதிமன்றத்துக்கு போனால் நிற்காது என தெரிந்தும் செய்தார்.

10.5% உள் இடஒதுக்கீடு: 4 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த போது ஒரு சமுதாயத்துக்கு உண்மையிலேயே செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் செய்திருக்கலாம். ஆனால் 4 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க போகிற நேரத்தில் 10.5% இடஒதுக்கீட்டை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அது வன்னியர்களை ஏமாற்ற மேற்கொண்ட நடவடிக்கை.

109 ஜாதி கோபம்: அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட 109 சமுதாய மக்களை உள் இடஒதுக்கீடு பாதிக்கும் என்ற அச்சத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறினார்கள். இன்றைக்கு வட தமிழகத்திலும் ஏமாற்றுகிற வேலையை செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென் தமிழகத்தில் வாழுகிற 109 சமுதாய மக்களை எடப்பாடி தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் அவர் செய்த தில்லு முல்லு மக்களை வெகுண்டெழ செய்தது. அதான் காரணம். அவர் செய்த மிகப் பெரிய பொலிட்டிக்கல் பிளண்டர். ஏற்கனவே துரோக சிந்தனை கொண்டவர். ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்ததுதான் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவுக்கு காரணம். இதற்கு பயந்து கொண்டுதான் 2 ஆண்டுகளாக பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை.

துரியோதனன்: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டதால் இப்போது தென் மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். வருகின்றன லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார். மகாபாரதத்தில் துரியோதனன் அகம்பாவத்தில் பேசிக் கொண்டு திரிவார். கடைசியாக வீழ்ச்சியை சந்தித்தார். அதுபோல, துரியோதனன் போன்ற துரோக சிந்தனை கொண்ட பழனிசாமி, வீழ்ச்சியடையப் போவது உறுதி.

யாருடன் கூட்டணி?: லோக்சபா தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறும். ஒருவேளை நாங்கள் கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை வந்தால் தனித்தும் போட்டியிடுவோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இது தொடர்பாக உரிய நேரத்தில் நாங்கள் தெரிவிப்போம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications