SIR குளறுபடி: தவெக வாக்குகளைத் தடுக்க திட்டம்.. அருண்ராஜ் பரபரப்பு
கோவை: எஸ்ஐஆர் குளறுபடிகளைக் கண்டித்து தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் இன்று நடைபெற்றது. இதில், தவெகவைச் சேர்ந்தவர்களுக்கு படிவங்கள் கொடுப்பதில்லை எனவும், பல இடங்களில் தவெக வாக்காளர்களுக்கு வாக்குரிமை கிடைக்காமல் தடுக்கப்படுவதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
SIR குளறுபடிகளைக் கண்டித்து தவெக சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அருண்ராஜ் கூறியதாவது: "மாநில அளவில் எஸ்ஐஆர்-க்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ் ஐ ஆர் என்பது கண்டிப்பாக அவசியம். ஆனால், தேர்தல் நேரத்தில் ஏன் அவசரமாக செய்ய வேண்டும். இதனைத் தவறில்லாமல் செய்ய வேண்டும். தமிழகத்தில் 6.4 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். பிஎல்ஓக்கள் எப்படி ஒரு மாதத்தில் மூன்று முறை நேரில் சென்று அவர்கள் பகுதியை பார்க்க முடியும்.
அரசுப் பணி வேலையைப் பார்த்துவிட்டு Blo வேலையையும் எப்படி ஊழியர்களால் பார்க்க முடியும். ஊழியர்களும் Blo பற்றி பெரிய புரிதல் இல்லாமல் தான் இருக்கின்றனர். தவெக ஆதரவாளர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர் படிவங்கள் கொடுக்கப்படவில்லை. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கின்றோம். நியாயமான சந்தேகங்களை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை.
இவ்வளவு அவசரமாக ஏன் செய்ய வேண்டும் பொறுமையாக அடுத்த ஆண்டு செய்யலாமே. இந்த வாக்காளர் பட்டியலை வைத்துதான் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் சரியாக நடக்கவில்லையா?. எஸ்.ஐ.ஆர். பணிகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவர்களின் வாக்குகளை உறுதி செய்வது மட்டுமின்றி அருகில் இருப்பவர்கள் அனைவரின் வாக்குகளையும் உறுதி செய்யப்படுகிறது.
பீகாரில் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, பின்னர் சிலரை சேர்த்திருக்கின்றனர். அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு பல திட்டங்கள் அறிவித்தார்கள். குறிப்பாக அங்கு பெண்கள் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பிஎல்ஓ பின்னால் திமுகவினர் செல்கின்றனர். தவெக கட்சிக்காரர்கள் சென்றால் அவர்களை அனுமதிப்பது இல்லை.
பீகாரில் எஸ் ஐ ஆர் அறிவித்த பொழுது தமிழக வெற்றி கழகம்தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. கொள்கை ரீதியாக நாங்கள் எஸ் ஐ ஆர் எதிர்க்கிறோம். தமிழக வெற்றி கழகம் இந்த முறை தான் போட்டியிடுகிறது. கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து இருப்பீர்கள். வரும் தேர்தலில் கூட்டணி இருக்குமா என்பதை தலைவர் தக்க நேரத்தில் முடிவு செய்வார்.
முதல் மாநாட்டில் சொன்ன நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. பாஜகவை தவிர்த்து கூட்டணிக்கு மற்ற கட்சிகளை வந்தால் ஏற்றுக் கொள்வோம். தமிழ்நாடு வேறு மற்ற மாநிலங்கள் வேறு. இங்கு தலைவருக்கு கரிஷ்மா வேண்டும், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவர் இருக்க வேண்டும், அப்படிப்பட்ட தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் மட்டும்தான் இருக்கிறார். அனைத்து மக்களுக்கும் அன்பு காட்டக்கூடிய தலைவராக தமிழக வெற்றிக் கழக தலைவர் மட்டுமே இருக்கிறார்.
எஸ்ஐஆரை அரசியலுக்காக எதிர்க்கவில்லை, படிவம் கொடுக்கும் பொழுது தமிழக வெற்றி கழகத்தை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கவில்லை. பல இடங்களில் தமிழக வெற்றிக்கழக வாக்காளர்களுக்கு வாக்குரிமை கிடைக்காமல் தடுக்கும் திட்டமும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஏன் அவசரகதியில் இதை கொண்டு வர வேண்டும்.
நியாயமான வாக்காளர்கள் நீக்கப்படக் கூடாது. ஒரு வாக்காளர் கூட நீக்கப்படக் கூடாது. தவெக சார்பில் அனைத்து பூத்துகளுக்கும் ஆட்கள் போடப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
தமிழக பள்ளிகளில் விபூதி - குங்குமம் வைத்து செல்ல தடையா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் -
நெல்லையில் தாமிரபரணி வரலாற்றுச் சுவடுகளை மறைத்து போஸ்டர்கள்.. தவெகவினர் செயலால் சர்ச்சை -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு?











Click it and Unblock the Notifications