கோவை மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டையை உடைத்த தவெக.. தப்பியது வேலுமணி மட்டுமே
கோவை: கோயம்புத்தூர் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுக பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வென்றது கோவை தெற்கில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜனதா வெற்றி பெற்றது. இதேபோல் கடந்த 2016 தேர்தலிலும் சிங்காநல்லூர் தொகுதியைத் தவிர, மற்ற 9 தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. இப்படி கடந்த 25 ஆண்டுகளாக இருந்த அதிமுகவின்கோட்டையை விஜய் தவெக முற்றாக உடைத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிமுக கோட்டையை இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தகர்த்துள்ளது. இதன்படி கோவை வடக்கு, சூலூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 6 தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வால்பாறை, பொள்ளாச்சி, கோவை தெற்கு தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எஸ்பி வேலுமணி தனது சொந்த செல்வாக்கு காரணமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் வென்றுள்ளார். கடந்த தேர்தலில் 10 தொகுதிகளைப் பெற்று இருந்த அ.தி.மு.க., இந்த தேர்தலில் 9 தொகுதிகளை இழந்து ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
சிங்காநல்லூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீகரி பிரசாத் 84,163 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸின் ஸ்ரீநிதி 65024 வாக்குகள் பெற்றார். அதிமுக இங்கு மூன்றாம் இடத்தையே பிடித்தது. அதிமுகவின் கேஆர் ஜெயராம் 57783 வாக்குகளே பெற்றார்.
கிணத்துக்கடவு தொகுதியில் தவெக வேட்பாளர் விக்னேஷ் வெற்றி பெற்றார். அவர் 99950 வாக்குகள் பெற்றார். திமுகவின் சபரி கார்த்திகேயன் 88240 வாக்குகள் பெற்றார். அதிமுகவின் தாமோதரன் 67789 வாக்குகள் பெற்றார். அதாவது இங்கும் மூன்றாவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சுனில் ஆனந்த் என்பவர் 8009 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரத்தை வீழ்த்தியுள்ளார்.
மேட்டுப்பாளையத்திலும் அதிமுக 3வது இடத்தையே பிடித்தது. கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ் 42 ஆயிரத்து 140 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அருண்குமாரை தோற்கடித்தார்.
பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் வானதி சீனிவாசன் போட்டியிட்ட கோவை வடக்கு தொகுதியில் தவெகவேட்பாளர் சம்பத் குமார் 21992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக இங்கு இரண்டாம் இடத்தை பிடித்தது. பாஜகவின் வானதி சீனிவாசன் 3வது இடத்தையே பிடித்தார்.
கோவை மாவட்டத்தின் சூலூர் தொகுதியையும் தவெக கைப்பற்றியது. தவெக வேட்பாளர் சுகுமார் 90531 வாக்குகள் பெற்றார். அதிமுகவின் விபி கந்தசாமியை 4790 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இங்கு திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
தொண்டாமுத்தூரில் மட்டுமே அதிமுக வென்றது. அங்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி 14 ஆயிரத்து 726 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சதீஷ் ராஜூவை வீழ்த்தினார். தவெக வேட்பாளர் சதீஷ் ராஜூ பல சுற்றுகளில் கடும் போட்டியும் கொடுத்தார். அதேபோல் திமுகவின் கார்த்திகேயனும் நல்ல போட்டியை தந்தார். எனினும் 3வது இடத்தையே திமுக வேட்பாளர் பிடித்தார். வால்பாறை, பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications