தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில் உள்ளனர்.. மாணிக்கம் தாகூர் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தேர்தலில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. ஏற்கனவே கம்யூனிஸ்ட்கள் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தவெக அமைச்சர்கள், நிர்வாகிகள் ரசிகர்கள் மன நிலையில் இருக்கிறார்கள். எங்கள் இருவரின் மனநிலை வேறு என மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்துக்கு நீட் வராது. அந்தந்த மாநிலங்களின் முடிவின்படி நடக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தான் தமிழகத்தில் நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வு இல்லை என்றால் தான் தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வருவோம் என அமித்ஷாவிடம் அவர் பேசியிருக்க வேண்டும்.

tvk-ministers-in-fans-mode-said-congress-manickam-tagore

ராகுல் காந்தியிடம் முதல் ஆதரவு

அதற்கு திராணி இல்லாமல் காங்கிரஸ் மீது பழி போடுகிறார்கள். ராகுல் காந்தி பிரதமரானால் முதல் கையெழுத்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது தான். தவெக அமைச்சர்கள் ரசிகர் மன்ற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களை மாற்ற முடியாது. அதனால் தான் ராகுலுக்கு பதிலாக விஜயை பிரதமர் என்று கூறி வருகிறார்கள். இந்தியாவின் சூழல் எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அமித்ஷாவும், மோடியும் எதிர்க்கட்சிகளின் பவரை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.

சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை நெரிக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். தவெக மனநிலை வேறு எங்கள் மனநிலை வேறு. மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க கூடாது என்பது தமிழக காங்கிரஸின் நிலைப்பாடு. காவிரி தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சனை. விளம்பரத்துக்காக கர்நாடகா அரசியல்வாதிகள் இதை பேசி கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முடியாது.

விஜய் பேசட்டும்

இந்தியா கூட்டணி அழிந்துவிட்டது என ஒரு கட்சி சாபம் விட்டு வெளியேறியது. திமுகவுடன் தேமுதிக, மநீம கட்சிகள் விலகிவிட்டன. இப்போது இந்தியா கூட்டணியில் 23 கட்சிகள் உள்ளன. தவெகவுக்கு எம்பி வந்தால் அவர்களை எங்கள் கூட்டணியில் இணைப்போம். எம்பி இருந்தால் தான் அவர்களை கூட்டணியில் இணைப்போம். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதலமைச்சராவதற்கு விஜய் முதலில் ஆதரவு கேட்டது ராகுல் காந்தியிடம் தான்.

முதல் ஆதரவு கடிதம் காங்கிரஸ் கட்சிக்கு தான் வழங்கப்பட்டது. தவெக அமைச்சர்களுக்கு இது நன்றாக தெரியும். இல்லையென்றால் இந்நேரம் அமித்ஷா கதையை முடித்திருப்பார். கட்சியை முடித்துவிட்டு பழனிசாமி முதலமைச்சராகியிருப்பார். இந்த நிலை எல்லாருக்கும் புரியும். விஜய் எப்போதும் கம்மியாக தான் பேசுவார். தேர்தல் வரட்டும். பேச வேண்டிய நேரத்தில் பேசுவார் என நினைக்கிறேன்.

கட்டமைப்பு வலுவாக

நாடாளுமன்றத்தில் 2001 ஆம் ஆண்டில் இருந்தே லைவ் இருக்கிறது. சட்டமன்றத்தில் இப்போது தான் லைவ் கொடுக்கிறார்கள். அதனால் நிறைய பார்ப்பார்கள். இது செட்டிலாக சில மாதங்களாகும். இடது சாரிகளை கணக்கெடுப்பது என்று அதிகாரிகள் செய்தது தவறு. அந்த வட்டாட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் செய்துவிட்டார்கள் என ஒதுங்க முடியாது.

அதிகாரிகள் சாயம்

அமைச்சர்கள் எல்லாரும் புதியவர்கள். செங்கோட்டையன் மட்டுமே பழையவர். இதை கவனமாக அணுக வேண்டும். அதிகாரிகள் மீது உடனடியாக சாயம் பூச கூடாது. நதிகள் இணைப்பு இந்தியாவில் நடப்பதற்கு சாத்தியமில்லை. ஒரு நதியின் ஓட்டத்தை மாற்றினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளது. அதனால் அதிக முதலீடு சாத்தியம் தான். எடப்பாடியாரும், ஸ்டாலினும் முதலீட்டுகளை ஈர்த்தனர்.

இதில் குறைகளை தேட கூடாது. கையெழுத்து போட்ட உடனே எல்லாம் நடந்து விடாது. நிறுவனம் இயங்குவதற்கு பல நடைமுறைகள் உள்ளன. ஒரு நாளில் மேஜிக்காக நடக்காது. தமிழகத்தில் தொழில் அஸ்திவாரம் வலுவாக உள்ளது. ஜிடிபியில் நம் பங்களிப்பு அதிகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் ஆட்சி மாறினால் பழைய திட்டங்களை கைவிடுவார்கள். தமிழகத்தில் அப்படி செய்யவில்லை. அதனால் முதலீடு கட்டமைப்பு வலுவாக உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+