‘ஜனநாயகன் பட டிரெய்லர் ஒரு எழுச்சி.. மாற்றத்தை உருவாக்கும்..’ செங்கோட்டையன் புகழாரம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உள்ளது. அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் மிகவும் எழுச்சியாக இருந்தது. அது மாற்றத்தை உருவாக்கும் திரைப்படம் என்று பாராட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "2026 சட்டமன்ற தேர்தலில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்க முடியாது. வரலாற்றை மாற்ற முடியாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் கூறியுள்ளார்.

தவெக வரலாறு படைக்கும்
தமிழக வெற்றி கழகம் புதிய வரலாற்றை படைக்கக்கூடிய இயக்கமாக எதிர்காலத்தில் இருக்க போகிறது என்பதை அவருக்கு பதிலாக கூற விரும்புகிறேன். மக்களின் நிலை என்ன என்பதை களத்தில் தான் காண வேண்டும். உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது முதலிடத்தில் விஜய், இரண்டாவது இடத்தில் தான் பிரதமர் மோடி, மூன்றாவது இடம் முன்னாள் ஆந்திரா முதலமைச்சர், நான்காவது இடம் இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தனர்.
அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று காலம் பதில் சொல்ல இருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம், எடப்பாடி பழனிசாமியே நூறாண்டு காலம் அதிமுக பொதுச் செயலாளராக இருந்தால் எங்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார். அப்படியென்றால் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று பொருள்.
பொங்கல் வரை பொறுத்திருங்கள்
திமுக ஆட்சியில் இருந்தபோது, எம்ஜிஆர் வெளியே வந்து அவர்தான் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றைப் படைத்தார். அதேபோல தவெக தலைவரும் முதலமைச்சர் ஆவார் என்று மக்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள் அதற்கெல்லாம் பதில் சொல்வது சரியாக இருக்காது. நல்லவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த நிலை விஜய்க்கு உருவாகியுள்ளது. எங்களுக்கு இரண்டு கட்சிகளும் வேண்டாம். புதிய முகம் த தேவை என்று தமிழ்நாடு மக்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தை வெளியிடும்போது வளர்ந்து வரும் இயக்கங்களுக்கு தடைகள் ஏற்படும். பொங்கல் பண்டிகை வரை பொறுத்திருங்கள். அதற்குள் எத்தனை பேர் வருகிறார்கள் என்று பாருங்கள்.
ஜனநாயகன் டிரெய்லர் எழுச்சி
ஜாக்டோ ஜியோ கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அரசாணை எவ்வாறு இருக்கிறது என்று முழுமையாக தெரிந்து கொண்டு, அதன் பிறகு தான் பதில் அளிக்க வேண்டும். மேலும் அது தேர்தல் அறிவிப்புதான். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்.
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஒரு வரலாறு படைத்துள்ளது. அங்கு பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் தான் சாலையில் ரோட் ஷோ நடத்தப்படும். பொதுவாக அங்கு டிராபிக் ஜாம் ஆகாது. அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலாகியுள்ளது. ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் மிகவும் எழுச்சியாக இருந்தது. அது ஒரு மாற்றத்தை உருவாக்கும் திரைப்படம். மக்கள் வியக்கத்தக்க வகையில் அந்த படம் இருக்கும்" என்றார்.
-
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
தொடங்கியது இடைத்தேர்தல் ஃபீவர்.. 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்.. தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு! -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம்












Click it and Unblock the Notifications