என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன.
பாஜக தரப்பில் தவெக விஜய்யை தங்கள் கூட்டணியில் இழுக்க பல்வேறு முயற்சிகளைசெய்து வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் ஆஃபர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் முதலமைச்சராக தான் அரசியலுக்கு வந்துள்ளார். துணை முதலமைச்சர் பதவி எல்லாம் வாய்ப்பே இல்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "டெல்லியில் நடைபெற்ற சிபிஐ ரெய்டுக்கு எங்கள் தவெக தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார். எங்கள் தலைவர் முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சினிமா உள்ளிட்ட அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்துள்ளார்.
விஜய் தான் மாற்றம்
தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிகளவில் திரண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் பதற்றமான சூழல் நிலவுகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற மன நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
இந்த மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெக கட்சியில் உள்ளனர். தவெக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தற்போதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. எங்கள் தலைவருக்கு துணை முதலமைச்சர் பதவி அல்லது எதிர்க்கட்சி பதவி வழங்கப்படும் என்றெல்லாம் செய்தி போடுகிறார்கள்.
முதலமைச்சர் பதவி மட்டும் தான்
விஜய் முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். துணை முதலமைச்சர் பதவிக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருகிறார்கள். இதற்கு முன்பு இப்படி ஒரு எழுச்சியை பார்த்ததில்லை" என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications