இது லிஸ்டில் இல்லையே.. கோவையை தட்டி தூக்கிய தவெக.. உள்ளாட்சிக்கும் ஸ்கெட்ச்
கோவை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் தவெக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அதிமுக 1 தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. கோவையை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்த திமுக 3 தொகுதிகளில் வென்றுள்ளது. கோவையில் தவெக மேற்கோள்ளவுள்ள அடுத்தகட்ட திட்டம் என்ன?
கோவை கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், "6 மாதங்களுக்கு முன்பு தவெக பூத் கமிட்டி மாநாட்டில் எங்கள் தலைவர் தொகுதி பற்றிய புக்கை கொடுத்தார். அதை வாங்கும்போது இந்த புக்கை எப்படி கொடுக்கிறேனோ, அதேபோல தேர்தலில் வெற்றி பெற்று சான்றிதழை உங்களிடம் வழங்குவேன். இதுதான் என் லட்சியம் என்றேன்.

அடுத்த திட்டம்
சொன்ன மாதிரியே இப்போது வெற்றி சான்றிதழை அவரிடம் காட்டுவதற்காக எடுத்து செல்கிறேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம் இது. எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். கோவையில் 10 தொகுதிகளில் 6 இல் தவெக வெற்றி பெற்றுள்ளது. 4 தொகுதிகளை விட்டுவிட்டோம். முக்கியமாக கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் தொகுதியில் உழைத்திருக்க வேண்டும்.
அங்கு இன்னும் கூடுதலாக உழைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இனி தவெகவின் கோட்டையாக கோவை இருக்கும். அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் இங்கு தவெக ஸ்வீப் அடித்து வெற்றி பெறும். மற்ற கட்சிகள் எல்லாம் ஆரத்தி எடுப்பதற்கு ஆள் செட் செய்து நிற்க வைப்பார்கள். மக்களே எங்களுக்கு உற்சாகமாக வரவேற்கிறார்கள்.
நன்றிகடன்
மக்கள் எங்களை நம்புகிறார்கள். அதை காப்பாற்ற வேண்டும். நான் மாவட்ட செயலாளர் ஆக வேண்டும் என்றோ, சீட் கிடைக்கும் என்றோ நாங்கள் முடிவு செய்யவில்லை. தளபதி பார்த்து எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதேபோல கோவையில் யார் அமைச்சர் ஆவார்கள் என்பதையும் தளபதி தான் முடிவு செய்வார். அவர் நல்ல முடிவு எடுப்பார்" என்றார்.
கோவை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சம்பத்குமார் செய்தியாளர்களிடம், "தளபதி தான் வேட்பாளர் என்று மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். 1,000 கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு, மக்கள் நல்லாட்சி தான் வேண்டும் என்று எங்களை தேர்வு செய்துள்ளனர். மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம். தளபதி மக்களுக்கான தலைவர். அவரை மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை 100 சதவீதம் காப்பாற்றுவோம்" என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications