கோவையில் சரிந்த அதிமுக கோட்டை.. தெற்கு தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக!
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன், கோவை மாவட்டத்தின் நிலவரமும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக கவனிக்கப்பட்டது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதி மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்தது. திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி வாகையை சூடியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் கடும் போட்டி நிலவிய நிலையில், அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக வலுவான இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 85.10% வாக்குகள் பதிவான நிலையில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், காலை முதலே தவெக கணிசமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது.

கோவை தெற்கு தொகுதியில் மொத்தம் 1,88,878 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,58,799 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக சார்பில் செந்தில் பாலாஜி, அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்தத் தொகுதி கடந்த காலங்களில் அதிமுகவின் பலமான கோட்டையாக இருந்தாலும், இந்த முறை திமுக சார்பில் செந்தில் பாலாஜி சிறப்பு கவனத்துடன் களம் இறங்கினார். தேர்தலுக்கு முன்பே கோவைக்கு குடிபெயர்ந்து தீவிர பிரச்சாரம் செய்தது இந்தத் தொகுதியை மிகவும் பரபரப்பாக மாற்றியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து செந்தில் பாலாஜி முன்னிலையில் இருந்தார். தவெக வேட்பாளர் செந்தில் குமார் பல சுற்றுகளில் முன்னிலை பெற்று, அதிமுகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தினார்.
இறுதியில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 59,167 வாக்குகள் பெற்று 1,991 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் செந்தில் குமார் 57,176 வாக்குகள் பெற்று நெருக்கமான இரண்டாம் இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 31,236 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் 5,017 வாக்குகளும் பெற்றனர்.
மொத்தத்தில், வெற்றி திமுகவுக்கு சென்றாலும், கோவை தெற்கு தொகுதியில் தவெக காட்டிய வலுவான போட்டி, அந்தக் கட்சி இந்த மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வருவதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
-
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications