தவெகவில் அடுத்த விக்கெட் கோவை தெற்கு.. ஆப்சென்டான வேட்பாளர்.. சம்பவம் செய்த நாம் தமிழர்
கோவை தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விஜய் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால் தமிழ்நாடே உற்று நோக்கும் கோவை தெற்கு தொகுதியில் தவெக மிகவும் மந்தமாக உள்ளது. அங்கு நாம் தமிழர் வேட்பாளர் இளைஞர்களை குறிவைத்து பணியாற்றி வருவது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும், அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

கோவை தெற்கு களம்
கோவை மக்கள் சட்டமன்ற தேர்தலில் ஒரு விதமாகவும், நாடாளுமன்ற தேர்தலின்போது ஒரு விதமாகவும் சிந்தித்து வாக்களிக்கிறார்கள். கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக இந்தமுறை செந்தில் பாலாஜியை நேரடியாக களமிறக்கியுள்ளனர். இதனால் கோவை தெற்கு தொகுதியை தமிழ்நாடே உற்று நோக்கி கொண்டிருக்கிறது.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி, அதிமுக வேட்பாளராக அம்மன் அர்ஜு னன், நாம் தமிழர் வேட்பாளராக பேரறிவாளன், தவெக வேட்பாளராக செந்தில்குமார் களமிறங்கியுள்ளார்கள். 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களில் கோவை தெற்கில் 2 முறை அதிமுக, ஒருமுறை பாஜக (அதிமுக கூட்டணி) வெற்றி பெற்றுள்ளனர்.
மாற்றத்திற்கான களம்
அதேநேரத்தில் அங்கு மாற்றத்தை விரும்பும் மக்களும் அதிகளவு இருக்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இதே கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட்டார். அங்கு அவர் 51,481 ஓட்டுகள் பெற்று வெற்றியின் விளிம்பு வரை சென்றார். சுமார் 18 சுற்றுகளுக்கு காங்கிரஸ், பாஜகவை விட கமல்தான் முன்னிலையில் இருந்தார்.
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் கோவை தெற்கு தொகுதியை கேட்டனர். கடைசியில் மநீம தேர்தலில் போட்டியில்லை என்று கமல்ஹாசன் விலகிவிட்டார். இதனால் திமுகவே நேரடியாக இறங்கியுள்ளது. இந்தமுறை கோவை தெற்கு தொகுதியில் தவெக அதிக வாக்குகளை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக ஆப்சென்ட்
ஆனால் களத்தில் தவெக ஆப்சென்டாகவே உள்ளது. செந்தில் பாலாஜி - அம்மன் அர்ஜுனன் இடையேதான் களத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தவெக ஆமை வேகத்தில் உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஓட்டுகளை குறிவைத்து பணியாற்றி வருகிறார்கள்.
நாம் தமிழர் வேட்பாளர் பேரறிவாளன் அங்கு ஒவ்வொரு வீடு வீடாக சென்று மக்களிடம் இயல்பாக பேசி வாக்கு கேட்கிறார். மேலும் முக்கியமான பகுதிகளில் தெருமுனை கூட்டங்களையும் நடத்தி அதிரடியாக பேசுகிறார். பேரறிவாளனை ஆதரித்து சீமான், தவெகவை அதிகம் விமர்சிக்கும் சாட்டை துரைமுருகன் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
நாம் தமிழர் வேகம்
செந்தில் பாலாஜியையும் பேரறிவாளன் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சமூகவலைதளங்கள் மூலமாகவும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறார். தினசரி பிரச்சாரம் செய்யும் வீடியோக்களை தன்னுடைய சமூகவலைதள பக்கங்களிலும் பதிவேற்றுகிறார். எனக்கு வாக்களிக்காவிடினும் பரவாயில்லை. பணம் வாங்கி கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று மக்களிடம் வலியுறுத்துகிறார்.
இதற்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மறுபக்கம் தவெக வேட்பாளர் செந்தில்குமார் கண்டால் வரச்சொல்லுங்க என்று தவெக நிர்வாகிகளே தேடும் நிலையில் தான் இருக்கிறார். அவருக்கு ஆதரவாக விஜய் மற்றும் தவெக இரண்டாம் கட்ட நிர்வாகிகள் யாரும் தற்போதுவரை பிரச்சாரம் செய்யவில்லை.
-
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications