மொத்தமும் போச்சா.. ஜனநாயகன் படத்தை ஒளிபரப்பிய கோவை உள்ளூர் சேனல்.. காவல்துறையும் கைவிரிப்பு
கோவை: வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். பெரிய நட்சத்திர பட்டாளமே அந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், இது அவரின் கடைசி படம் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு சிக்கல்களால் ஜனநாயகன் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. மறுபக்கம் ஜனநாயகன் சமூகவலைதளங்களில் ரிலீஸ் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி ஓய்வதற்குள், கோவை உள்ளூர் சேனல் ஒன்றில் ஜனநாயகன் படத்தை முழுமையாக ஒளிபரப்பியுள்ளனர். இதுகுறித்து தவெகவினர் அளித்த புகாரை விசாரிக்க முடியாது என்று காவல்துறை மறுத்ததால் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முயற்சி செய்வது வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். ஆனால் தவெக மட்டும்தான் களத்தில் ஆக்டிவாக இல்லை. விஜய்யின் பிரச்சாரங்களே அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

ஜனநாயகன் படம் லீக்
மறுபக்கம் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன், தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் கடந்த 3 மாதங்களாக திரையரங்குகளில் வெளியாகாமல் இருக்கிறது. கடந்த வாரம் திடீரென ஜனநாயகன் சமூகவலைதளங்களில் வெளியானது. ஒரு காட்சி மட்டும் வெளியானது என்று தான் நினைத்தனர். ஆனால் மொத்த படமும் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜனநயகன் படத்தை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகன் படத்தை யாரும் பரப்ப வேண்டாம் என்று படக்குழு கூறியது. ஜனநாயகன் படம் சமூகவலைதளங்களில் வெளியானதை திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் கண்டித்துள்ளனர்.
உள்ளூர் சேனலில் ஒளிபரப்பு
இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி இயங்கி வருகிறது. இணையதளத்தில் கசிந்த ஜனநாயகன் திரைப்படத்தை, அந்த உள்ளூர் சேனல் நேற்று முன்தினம் இரவு முழுமையாக ஒளிபரப்பியுள்ளது. திரையரங்குகளுக்கே வராத ஒரு புதிய படத்தை உள்ளூர் சேனலில் வெளியிட்டதை பார்த்து தவெக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால் இது போன்ற புகார்களைச் சிறப்புப் பிரிவு காவல்துறையினர் தான் விசாரிக்க முடியும் என்று உள்ளூர் காவல்துறையினர் புகாரைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தவெகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
காவல்துறை கைவிரிப்பு
இது குறித்து தவெக மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் மோகனப்பிரியா செய்தியாளர்களுக்க அளித்த பேட்டியில், "இன்னும் திரையரங்குகளுக்கே வராத, சென்சார் சான்றிதழ் குறித்த விவரங்கள் முழுமையாகத் தெரியாத ஒரு படத்தை, உள்ளூர் சேனலில் ஒளிபரப்பியது சட்டப்படி குற்றமாகும். இது திரையுலகினரின் உழைப்பைச் சுரண்டும் செயல். சம்பந்தப்பட்ட சேனல் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்படும்" என்றார். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
‘ஜனநாயகன்’ லீக் ஆனது தவறு இல்ல.. ஆதங்கத்துடன் நடிகர் சூரி போஸ்ட்.. விஜய்க்கு சப்போர்ட்டுக்கு வந்த விஜய் தேவரகொண்டா -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications