ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெகவில் ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணப்படுத்தலாம் என்று மூடநம்பிக்கை பரப்பிய பெண்ணை கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்தார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடவுள்ளார். தவெக தேர்தல் வாக்குறுதிகளையும் விஜய் அறிவித்தார்.

tvk-coimbatore-woman-candidate-controversy-over-fake-astrology-promise

தவெகவில் ஜோதிட வேட்பாளர்

இதற்கு பிறகு விஜய் 234 தொகுதி வேட்பாளர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். வேட்பாளர் அறிவிப்பின்போது விஜய்யுடன் ஒவ்வொரு வேட்பாளரும் செய்த ரியாக்‌ஷன்கள் வைரலாகின. இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக வேட்பாளராக கனிமொழி சந்தோஷ் என்கிற பெண் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் நேற்று ஊடகங்களில் பேட்டி கொடுத்து லைம் லைட்டில் இருந்தார்.

அவரின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கனிமொழி திருமணமானவர். வழக்கறிஞர், சமூக ஆர்வலர், தொழிலதிபர் என்று பல அடையாளங்கள் இருந்தாலும் ஜோதிடத்தையும் தொழிலாக செய்து வருகிறார். செலிபிரட்டி ஜோதிடர், வாஸ்து வல்லுநராகவும் உள்ளார். ஜோதிடம் குறித்து அவரின் பழைய பதிவுகள் வைரலாகி வருகிறது.

புற்றுநோய் குணப்படுத்தலாம் சர்ச்சை

"மருத்துவ ஜோதிடம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளை. இதைப்பற்றி பெரிய விழிப்புணர்வு இல்லை. இப்போது நோய்கள் வேகமாக பரவி வருகிறது என்பதால் மருத்துவ ஜோதிடம் முக்கியமாகவுள்ளது. ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு என்ன நோய் வரும் என்பதை கண்டறிந்து சரிபடுத்தலாம். கொடூரமான உயிர் கொல்லி நோய் புற்று நோய். என்னதான் மருந்துகள் வந்துவிட்டது என்று சொன்னாலும் புற்று நோயால் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

மருத்துவ ஜோதிடம் மூலம் புற்று நோயை கூட 100 சதவீதம் குணப்படுத்தலாம்" என்று கனிமொழி கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் மருத்துவ ஜோதிடம் பற்றிய வீடியோக்களை அதிகளவு பதிவு செய்து வந்தார். இவரை சமூகவலைதளங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இவரின் பதிவுகளை திமுக, அதிமுக நாம் தமிழர் கட்சியினர் சமூகவலைதளங்களில் பரப்பி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மூட நம்பிக்கை

நானே பார்த்து. பார்த்து தேர்வு செய்த வேட்பாளர்கள் என்று விஜய் பெருமிதமாக சொன்னார். வேட்பாளர்களின் பின்னணி கூட தெரியாமல் அறிவித்துள்ளனர். பல வருடங்களாக விஜய்க்காக உழைத்த கட்சியினருக்கு சீட் கொடுக்காததால் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அறிவியலுக்கு எதிராக மூட நம்பிக்கையை பரப்பி வருவோருக்கு சீட் வழங்கியுள்ளனர் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+