மீனவர் பிரச்சனையில் அப்டேட் ஆகாத விஜய்.. வானதி சீனிவாசன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

கோவை: அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தும்போது பவர் கட் செய்வது திமுக அரசின் வாடிக்கை. அதற்காக தவெக தலைவர் விஜய் பிரதமர் மோடி வரைக்கும் ஒப்பீடு பண்ண தேவையில்லை எனவும், மற்ற கட்சிகளுக்கு என்ன நடக்கிறதோ? அதுதான் விஜய்க்கும் நடக்கிறது எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், மீனவர் பிரச்சனையில் விஜய் மேலும் அப்டேட்டாக வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பா.ஜ.க.சார்பில் நடைபெற்ற மோடியின் தொழில் மகள் விழாவில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1,500 பெண்களை தொழில் முனைவோராக மாற்ற இலவச பொருட்கள் வழங்கப்பட்டு பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளது.

vijay-not-updated-on-fishermen-issue-vanathi-srinivasan-criticizes

பவர்கட் செய்யும் திமுக

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பிரதமர் மோடி வந்தால் மின்வெட்டு செய்வீர்களா?. ஆர்.எஸ்.எஸ் தலைவர் வந்தால் மின்வெட்டு செய்வீர்களா? என கேட்கிறார். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இதுபோல கூட்டம் நடத்தும் பொழுது தி.மு.க அரசு மின்வெட்டு செய்வது வாடிக்கையான விஷயம் தான். அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பயணிக்கும் இடங்களிலும் இதுபோல நடக்கிறது.

அண்ணாமலை விஷயத்தில்..

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் பயணத்திலும் இதுபோல செய்தனர். தீவிர அரசியலில் இல்லாததால் விஜய்க்கு இதை பற்றி தெரியவில்லை. மேலும், அவர் பிரதமர் மோடி வரைக்கும் ஒப்பீடு செய்யத் தேவையில்லை. மற்ற கட்சிகளுக்கு என்ன நடக்கிறதோ ? அதுதான் விஜய்க்கும் நடக்கிறது. எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மீனவர் விவகாரம்

மேலும், மீனவர் விவகாரம் தொடர்பாக நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப் போல விஜய் பழசை மறந்து விட்டார் என நினைக்கிறேன். கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பலமுறை நானும் மீனவர்களுக்காக போராடி இருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸை பார்த்து கேட்க வேண்டியதை இப்பொழுது கேட்கின்றீர்கள்.

அப்டேட்டாகாத விஜய்

மீனவர்கள் பிரச்சனையில் விஜய் அப்டேட்டாக இல்லை என்பதை தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2014 க்குப் பிறகு மோடி பிரதமராகி இருக்கிறார். அதனால் நிலைமை மாறி இருக்கிறது என்பதால் விஜய் அப்டேட் ஆகிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+