கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?
கோவை: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி பல இடங்களுக்குச் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடவுள்ளது. நாம் தமிழர், அதிமுக, திமுக கட்சிகளை தொடர்ந்து தவெகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. பாஜக இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டைத் தொகுதி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஜெயலலிதா பாணியில் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். பெரம்பூர், திருச்சி தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய சொத்துப் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பட்டியலின்படி விஜய்க்கு ரூ. 600 கோடிக்கு மேல் அசையும், அசையா சொத்துகள் உள்ளன. சொத்துகள் பட்டியலில் விலை உயர்ந்த கார்களோடு, விஜய் ஒரு டிவிஎஸ் எக்ஸ்.எல். இருசக்கர வாகனத்தையும் வைத்திருப்பதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவோ விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் விஜய் எதற்கு டிவிஎஸ் எக்ஸ்எல் வாங்கியிருக்கிறார் என்று கேள்வி எழுந்தது.
எதற்கு டிவிஎஸ் எக்ஸ்.எல்.
ஒருவேளை வீட்டில் இருக்கும் வேலை ஆட்கள் பயன்படுத்துவதற்காக இந்த வண்டி வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தன்னுடைய பயன்பாட்டுக்காகத்தான் விஜய் இந்த இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய வீட்டிற்கு பால், பேப்பர் போட வரும் நபர்கள் போலயே இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளாராம்.
யாரும் விஜய் என்று அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக இதனைப் பயன்படுத்துகிறாராம். கிழக்கு கடற்கரை சாலை, தனது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அந்த வண்டியில் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கட்சி அலுவலகம், நண்பர்களின் வீடுகளுக்கும் இந்த வண்டியில் ஹெல்மெட் அணிந்து சென்று வருகிறார்.
ரஜினி பாணி
ரஜினி வெளியில் செல்லும்போது மாறுவேடத்தில் செல்வது வழக்கம். அதேபோல, விஜயும் தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி சாதாரணமாக சென்று வருகிறார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.
-
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்!











Click it and Unblock the Notifications