கோவையில் கோரதாண்டவம்.. ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்ற 2 பெண்கள் பலி!
கோவை: கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பெண்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் திருச்சி, தூத்துக்குடி, திருப்பூரில் ஏற்கனவே கொரோனா மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
இந்நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அண்மையில் 60 வயது மூதாட்டி ஒருவர் பக்கவாத பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியானது. இதனால் கொரோனா தடுப்பு சிகிச்சை அந்த மூதாட்டிக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கொரோனா பாதிப்பில் மூதாட்டி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கோவை பிஎன் புதூரை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், கொரோனா பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அந்த பெண்ணும் உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 5-ந் தேதி பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் கோவையில் மட்டும் கொரோனாவால் மொத்தம் 3 பேர் பலியாகி இருப்பது அங்கு அதிர்ச்சியை ஏர்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications