ஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்!
கணவனை நடுரோட்டில் 2 மனைவிகள் அடித்த சம்பவம் பரபரப்பை தந்துள்ளது
Recommended Video
கோவை: "ஏற்கனவே நாங்க 2 பேர் இருக்கோம்.. இதுல 3வது வேறயா.." என்று கேட்டு இளைஞரை 2 மனைவிகள் நடுரோட்டிலேயே புரட்டி எடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரங்க அரவிந்த தினேஷ். இவருக்கு 26 வயதாகிறது. ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு 2016-ம் ஆண்டு, பிரியதர்ஷினி என்பவருடன் கல்யாணம் நடந்தது. ஆனால், 15 நாளிலேயே பிரியதர்ஷினியை தினேஷ் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

கொடுமை
அடி, உதை தாங்க முடியாத, பிரியதர்ஷினி மாமியார் வீட்டில் இதை பற்றி சொல்லியும், அவர்கள் காதிலேயே போட்டு கொள்ளவில்லை. இதனால் பேரூர் மகளிர் போலீசில் புகார் செய்த பிரியதர்ஷினி, திருப்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கே போய்விட்டார்.

அனுப்பிரியா
பிரியதர்ஷினி பிரிந்து போனதும், தினேஷூக்கு வசதியாக போய்விட்டது. அதனால் மேட்ரிமோனியலில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி இன்னொரு பெண்ணை தேடினார். கரூர் பகுதியை சேர்ந்த அனுப்பிரியா என்ற 23 வயது பெண்ணை கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்யாணம் செய்து கொண்டார்.

கொடுமை
ஒண்டிப்புதூரில் ஒரு வீட்டினை வாடகைக்கும் எடுத்து வசித்து வந்தார். ஒருசில மாதங்கள்தான் ஆயிருக்கும்.. அதற்குள் அனுப்பிரியாவையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார் தினேஷ். அடி, உதை தாங்காமல், அனுப்பிரியா கரூரில் உள்ள அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.

3-வது கல்யாணம்
அனுப்பிரியா சென்றுவிட்டதால், மீண்டும் தினேஷூக்கு வசதியாக போய்விட்டது. அதனால் 3-வதாக கல்யாணம் செய்ய திரும்பவும் மேட்ரிமோனியலில் பெண் தேடினார். இந்த விஷயம் 2 மனைவிகளுக்கும் தெரிந்துள்ளது. இதை பற்றி கேட்டதற்கு, அப்படித்தான் செய்வேன் என்று வீம்பு பேசியுள்ளார்.

தர்ணா
இதனால், பிரியதர்ஷினி, அனுப்பிரியா இருவரும், நேராக தினேஷ் வேலை பார்க்கும் ஃபேக்டரிக்கு சென்றனர். அவரை பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு, பேக்டரி தரப்பில் தினேஷை சந்திக்க அனுமதி தரவில்லை என தெரிகிறது. இதனால் இரு பெண்களும் பேக்டரி வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

பரபரப்பு
இதையடுத்து, தகவலறிந்து சென்ற போலீசார், 2 மனைவிகள், தினேஷை ஸ்டேஷனுக்கு வரும்படி சொன்னார்கள். இதனால் ஸ்டேஷனுக்கு செல்வதற்காக தினேஷ், பேக்டரியை விட்டு வெளியே வந்தார். அப்போது ஆவேசத்தில் காத்து கிடந்த 2 மனைவிகளும், தினேஷ் மீது சரமாரி தாக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புகார்
2 மனைவிகளிடம் இருந்து தினேஷை போலீசார் மீட்டு சென்றனர். தங்களை ஏமாற்றிய தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவிகள் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்து வருகிறது. 2 மனைவிகளும், 3-வது மனைவிக்கு அடிபோட்ட கணவனை துவைத்து எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கோவையில் ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications