கோவை குலுங்குது.. ஒருபக்கம் விஜய்.. மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின்.. ஒரே நாளில் கொங்கு விசிட்!
கோவை: இன்று கோவை வந்தடைந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். கோவையில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் துணை முதல்வர் உதயநிதி.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கோவையில் தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார். இந்தச் சூழலில் உதயநிதியும் கோவையில் முகாமிட்டுள்ளார்.

கோவையில் உதயநிதி ஸ்டாலின்
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தடைந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு கோவை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இன்று கோவையில் அரசு விழாக்களில் பங்கேற்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
முன்னதாக இன்று, கோவையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும், 800க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொள்ளும் மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவை இன்று காலையில் துவக்கி வைத்து கலந்து கொண்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஜல்லிகட்டு முடிவில் இன்று மாலை முதல்வர் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், யாரும் பிடிக்கப்படாத காளைக்கு துணைமுதல்வர் சார்பில் ஒரு காரும் பரிசு வழங்கப்பட உள்ளது.
ஹாக்கி மைதானம் அடிக்கல்
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் நடக்கும் 25 ஆயிரத்து 526 பயனாளிகளுக்கு 21,531 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கோவையில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் உள்ளிட்ட புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் துணை முதல்வர் உதயநிதி. கோவை ஆர்.எஸ்.புரத்தில் இந்த ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த ஹாக்கி ஸ்டேடியம் (International Hockey Federation - IHF) விதிமுறைகளின் படி கட்டப்பட உள்ளது
செந்தில் பாலாஜி ராஜினாமா
அமைச்சர் செந்தில் பாலாஜியோடு, அரசு விழாவில் மேடையை பகிர்ந்து கொள்ளும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழா முடித்து சென்னை வந்த பிறகு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தகவல் வெளியாகும் என்றும் பரபர தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக செந்தில் பாலாஜி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பதவியா? ஜாமீனா என நாளை தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறி உள்ளதால் இன்று இரவுக்குள் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
விஜய் கோவையில் இருக்கும் நேரத்தில்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கோவை வந்தார். தவெக பூத் கமிட்டி நிர்வாகிகளின் கோவை மண்டல கருத்தரங்கில் பங்கேற்று வருகிறார் விஜய். நேற்றும் இன்றும் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்நிலையில் தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கோவை விசிட் செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
நேற்று கோவை அவிநாசி சாலையில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்திய நிலையில், இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோ நடத்தி உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் இருந்து வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
-
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட்












Click it and Unblock the Notifications