நான் இருக்கேன்.. விட மாட்டேன்! கோவையில் கொ*யான மாணவன்! உடனே உதயநிதி செய்த செயல்! சீரியஸாகும் மேட்டர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்தினரை தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, மாணவனின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க திமுக போராடும் என அவர் உறுதி அளித்துள்ளாராம்.

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் , கல்லூரிக்கு வெளியில் சக மாணவர்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் அமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Coimbatore student murder

இந்த கொலை சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே போதை பொருள் குறித்து தகவல் அளித்ததால் மாணவன் படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுதிருக்கிறது.

இது தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை வேண்டும் என மாணவனின் பெற்றோரும் சக மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு திமுக சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் பாஜக. நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் கோஷ்டி மோதலில் தான் மாணவன் அமுதன் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், தங்கள் கல்லூரியில் போதைப் பொருள் கடந்த பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான், கோவையில் அடித்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமுதன் கோவையில் படித்து வந்த நிலையில், அவரது பெற்றோர் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகின்றனர். அமுதன் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.. அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடினமான சூழலில் உடன் இருப்பதாகவும். அமுதன் கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், உரிய நியாயம் கிடைக்கவும் திமுக போராடும் என்றும் உறுதி கொடுத்திருக்கிறார் என்கின்றனர் கோவை திமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+