வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை?
கோவை: கோவை வடக்கு சட்டசபை தொகுதியின் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின்போது வழங்கப்பட்ட மருந்தால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் ஐசியூவுக்கு மாற்றப்பட்டதோடு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாஜகவின் தேசிய மகளிரணியின் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி வாகை சூடினார்.
இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வானதி சீனிவாசன் தொகுதி மாறி களமிறங்கி உள்ளார். கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்கு பதில் கோவை வடக்கு சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தொகுதியில் வானதி சீனிவாசன் தொடர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் நேற்று வானதி சீனிவாசனுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டது. அவர் கால்வலியால் அவதிப்பட்டார். காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் முதல் அவர் தனது பிரசாரத்தை ரத்து செய்தார். கேஎம்சிஎச் எனும் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பாக்டீரியா தொற்றுவால் அவரது வலது காலில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இதனால் அவரால் நடக்க முடியாமல் போனதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண்டிபயாடிக் உள்பட மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது அவருக்கு வழங்கப்பட்ட மருந்தினால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் உடனடியாக அவர் நேற்று இரவு 8 மணியளவில் ஐசியூவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார். தற்போது அவர் டாக்டர்களின் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
ஐசியூவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் 3 முதல் 4 நாட்கள் வரை அவர் மருத்துவ சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வானதி சீனிவாசன் அடுத்த சில நாட்கள் கோவை வடக்கு தொகுதியில் பிரசாரம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. அவருக்கு பதிலாக பாஜக நிர்வாகிகள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் வானதி சீனிவாசன் இத்தகைய உடல்நல பிரச்சனையை எதிர்கொள்வதால் அவரது ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
-
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்! -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
சவுமியா, அன்புமணி போட்ட 2 பிளான்.. பென்னாகரம் 2026-ல் தமிழ்க்குமரனுக்கு காத்திருக்கும் அந்த 1 ஆபத்து -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம் -
கோவை ஷாக்! அண்ணாமலை - வானதி மோதலில் அந்த 1 மணி நேரத்தில் நடந்தது என்ன? வெளியே வராத திருப்பம் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான் -
வில்லிவாக்கத்தில் பக்கா பிளான்.. 6 மாசத்துக்கு முன்னாடியே ஸ்கெட்ச் போட்ட ஆதவ் அர்ஜுனா! -
காரைக்குடியில் விஜய் பரப்புரை செய்ய.. 37 நிபந்தனைகள்! லிஸ்ட் போட்ட தேர்தல் ஆணையம்! -
சொதப்பிய விஜய் கட்சி! கச்சிதமாக நிற்கும் திமுக, அதிமுக! எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் -
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000.. டியூஷன் அக்கா திட்டம்.. மேஜர் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்!












Click it and Unblock the Notifications