Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“முதல்வர் ஸ்டாலின் ஆழ்மனதில் உள்ள இந்து மத வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்” - சொல்வது வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆழ்மனதில் இருக்கும் இருக்கும் இந்து மத வெறுப்பு தற்போது வெளிப்பட்டுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் நீதித்துறைக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில் அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. தனி நீதிபதியின் உத்தரவைப் பெற்றும் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடும் செய்துள்ளது.

vanathi srinivasan mk stalin thirupparankundram

இந்நிலையில் நேற்று மதுரையில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், "மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி சமூகத்தை துண்டாடும் சதிச் செயலில் ஈடுபடுவது ஆன்மிகம் அல்ல.. அரசியல் கேடு கெட்ட மலிவான அரசியல். ஒரு சிலரின் அரசியல் லாபத்திற்காக மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி நடக்கிறது; வன்முறையை தூண்டக் கூப்பிட்டால், மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள்" எனப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் அரசு விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பரங்குன்றத்தில் தீபம் எங்கே ஏற்றப்பட வேண்டுமோ அங்கு வழக்கம்போல முறையாக ஏற்றப்பட்டுள்ளது. சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த நினைக்கிறார்கள் எனப் பேசியுள்ளார்.

வழக்கம்போல தன் ஆழ்மனதில் இருக்கும் இந்து மத வெறுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார். கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் மலை உச்சியில்தான் தீபம் ஏற்றப்பட்டது. அவ்வாறு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் கோரிக்கை. ஆனால், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பது ஆன்மிகம் அல்ல அரசியல் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தீபத் தூணில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கு, 1920-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலேயே நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது பாஜகவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸும் இல்லை. உள்ளூர் மக்கள்தான் லண்டன் நீதிமன்றம் வரை சென்று தீபத் தூணில் தீபம் ஏற்றும் உரிமைக்காக போராடியுள்ளனர். அதன் தொடர்ச்சி தான் இப்போது நடக்கும் சட்டப் போராட்டங்கள். அப்படியென்றால், 1920 ஆம் ஆண்டு நடந்ததையும் மு.க.ஸ்டாலின் அரசியல் என்கிறாரா?

திருப்பரங்குன்றத்தில் மட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்றாமல், பாதி மலையில் ஏற்றப்படுவது ஏன் என்பதற்கு முதலமைச்சர் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்? கோயில் மரபுகளை காக்க வேண்டிய சுப்பிரமணியன் சுவாமி கோயில் நிர்வாகம், தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் அவலம் எங்காவது நடக்குமா? இப்படி இந்துக்களுக்கு அநீதி இழைத்து விட்டு, உரிமைக்காக போராடினால் மலிவான அரசியல் என்கிறார் முதலமைச்சர்.

"எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அதை நாங்கள் முறியடிப்போம், சிதைப்போம். என ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால், நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. தனக்கு சாதகமானதாக இல்லாமல் போனால், நீதிமன்ற தீரப்பை கூட செயல்படுத்த மாட்டோம் என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்? நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் முறியடிப்போம், சிதைப்போம் என்கிறாரா?

மதுரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதித்துறைக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளுக்காக, இந்துக்களை இழிவுபடுத்தும் அரசியலுக்கு முடிவு கட்டும் காலம் விரைவில் வரும். அதர்மம் அழிந்து தர்மம் வென்றே தீரும். திருப்பரங்குன்றம் மலை உச்சயில் உறுதியாக தீபம் ஏற்றப்படும். திமுகவின் மலிவான இந்து விரோத அரசியலுக்கு முடிவு கட்டப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+