விஜய் வரட்டும் வேணாம்னு சொல்லல! அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? வானதி கொடுத்த புது விளக்கம்!
கோவை: நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் அழைப்பு விடுத்துள்ளார் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் இளைஞர்கள் ஜனநாயகத்தை பற்றி இன்னும் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய்க்கு முன்பாக ஒரு நடிகர் அரசியல் வந்தார் என்றும் அடுத்த முதல்வர் நான் தான் என்று கூறியவர் இப்போது ஷூட்டிங் வருவதை போல் அரசியலுக்கு அவ்வப்போது வந்து செல்வதாக கூறி நடிகர் கமல்ஹாசனை சூசகமாக அட்டாக் செய்தார் வானதி சீனிவாசன்.
அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் அதற்குள் வரக்கூடாது என்று கூறிய வானதி சீனிவாசன், வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணிப்பது தான் அரசியல் என்ற புது விளக்கத்தையும் கொடுத்தார். அப்படி தன் வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணிக்கும் உணர்வுடன் நடிகர் விஜய் வந்தால் வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமராகும் கனவு இருப்பதாகவும் ஆனால் பீகாரில் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் போடப்பட்டு அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும் கூறிய வானதி, அந்தப் பக்கம் போனால் நாங்க தானே இருக்கிறோம் என்றும் நீங்க கொடுத்ததை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
சிறு விமர்சனங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாத அரசாக திமுக அரசு இருப்பதாகவும் ஆனால் பிரதமர் குறித்தும் மத்திய அரசு பற்றியும் எத்தனையோ முறை ஏளனமான விமர்சனங்களை திமுகவினர் முன் வைத்திருக்கிறார்கள் எனவும் கூறினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications