"அதிமுக கோட்டையில் ஓட்டை போட்ட விஜய்"!.. கோவையில் தவெக அதிரடி முன்னிலை
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்றுள்ளது. 234 தொகுதிகளில் 114 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. அதிமுகவின் பலமான கோட்டையாக கருதப்பட்ட கோவை மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கணிசமான முன்னிலை பெற்று அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களம் கண்டுள்ளன. எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், 234 தொகுதிகளில் 114 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மேற்கு தமிழகத்தின் முக்கிய மையமான கோவையில் ஆச்சரியமான ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக அதிமுகவின் ஆதிக்கப் பகுதியாக கருதப்பட்ட இந்த மாவட்டத்தில், தற்போது தவெக வலுவான முன்னிலை பெற்று அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
5 தொகுதிகளில் முன்னிலை
தற்போதைய நிலவரப்படி, கோவையில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில், திமுக 1 தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனால், வழக்கமாக அதிமுகக்கு சாதகமாக இருந்த வாக்கு வங்கி இந்த முறை பிரிந்து, தவெக பக்கம் திரும்பியிருப்பது தெளிவாகிறது.
கோவையில் மாற்றம் எப்படி?
இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது தவெக. புதிய மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை விஜயின் தவெக உருவாக்கியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வேலைவாய்ப்பு, வளர்ச்சி, மாற்றம் ஆகிய கோஷங்களை முன்வைத்து கட்சி பிரச்சாரம் செய்தது வாக்காளர்களை கவர்ந்துள்ளது.
அதிமுகவுக்கு எச்சரிக்கை மணி
கோவை போன்ற பாரம்பரியமான வலுவான பகுதிகளில் கூட தவெக முன்னிலை பெறுவது, அதிமுகவுக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. கட்சியின் வாக்கு வங்கி சிதறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், கோவையில் ஏற்பட்ட இந்த மாற்றம் தமிழக அரசியலில் புதிய பாதையை சுட்டிக் காட்டுகிறது. இறுதி முடிவுகள் எப்படியிருப்பினும், "அதிமுக கோட்டையில் விஜய் ஓட்டை போட்டார்" என்ற அரசியல் வாசகம் இப்போது வலுவாக ஒலித்து வருகிறது.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications