Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா".. கோவை விஜய் ரசிகர்கள் போஸ்டர்.. மீண்டும் வந்த time to lead!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் புத்தாண்டு தினத்தையொட்டி நடிகர் விஜய் ரசிகர்கள் புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா என்றும் தலைமையேற்க சரியான நேரம் (time to lead) என்றும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    கோவை: புத்தாண்டு தொடக்கம்.. புவியில் இனி உமது ஆட்சி நடக்கும்… விஜய் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்கள்!

    கமல்ஹாசன், விஜயகாந்த் வரிசையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக அழைத்து வருகிறார்கள். ஆனால் விஜய் எந்த பதிலையும் சொல்லாமல் பொறுமையாக இருந்து வருகிறார்.

    கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் அமைப்பாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொடங்கவில்லை.

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    இந்த தேர்தலுக்கு முன்பு விஜய்யை எம்ஜிஆராகவும் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் சித்தரித்து பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. விஜய்யின் பிறந்தநாள், அவரது திருமண நாளின் போது ஏதேனும் அரசியலுடன் தொடர்புபடுத்தி போஸ்டர்கள் வெளியிடுவதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

    விருது வழங்கும் விழா

    விருது வழங்கும் விழா

    இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அரசியல் கட்சியாக பதிவு செய்ததை அடுத்து அவர்களை எதிர்த்து விஜய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அண்மையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கூட நமக்கான ரயில் வரும் போதுதான் ஏறிச் செல்ல வேண்டுமே தவிர வந்த ரயிலில் ஏறினால் நாம் போகும் இடத்திற்கு போய் சேர முடியாது என ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அரசியலுக்கு வருமாறு அவசரப்படுத்துவதாக கூறும் அவரது தந்தை எஸ்ஏசிக்கு கூறிய மறைமுக மெசேஜாகவே இது பார்க்கப்படுகிறது.

    விஜய் மக்கள் இயக்கம்

    விஜய் மக்கள் இயக்கம்

    இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடவும் தனது இயக்க கொடியையும் புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் விஜய் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் 161 இடங்களில் வென்றனர். இது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துவிட்டது.

    வெற்றி

    வெற்றி

    விஜய் பெயரை பயன்படுத்தியதற்கே இத்தனை வெற்றி என்றால் விஜய்யே அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்க தொடங்கினர். இந்த நிலையில் கோவையில் விஜய் ரசிகர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    கோவை மாணவரணி சார்பில்

    கோவை மாணவரணி சார்பில்

    கோவை உக்கடம் பகுதியில், விஜய் ரசிகர்கள் சார்பில், கோவை மாவட்ட தலைமை மாணவரணி சார்பாக, இன்று அந்த பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் புவியில் உமது ஆட்சி நடக்கும் தலைவா என குறிப்பிட்டு time to lead என வாசகம் அடங்கிய போஸ்டரை ஒட்டியிருந்தனர். இந்த பதம் இடம் பெற்றிருந்ததால் தலைவா படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது நினைவுக்கூரத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+