கோவையில் கேபிள் டிவியில் ஓடிய ஜனநாயகன்.. அதிர்ச்சியில் உறைந்த தவெகவினர்! விஜய்க்கு சோதனை மேல் சோதனை
கோவை: விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக வெளிவந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ஒரு புறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது கோவையில் ஜனநாயகன் படத்தினை கேபிள் டிவியிலும் ஒளிபரப்பு செய்ததாக தவெகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஜனநாயகன் முழு படமும் வெளியானது
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இனி தேர்தலுக்கு பிறகு ஏப்ரல் 30 அல்லது அதற்கு பிறகு தான் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் முழு படமும் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் முதலில் இணையத்தில் வெளியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து படக்குழுவினர் மீள்வதற்குள், ஜனநாயகன் முழு படமும் புல் ஹெச் டி தரத்தில் இணையத்தில் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர்கள் ரஜனிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். படக்குழு அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் நேற்று 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட இணையதள முகவரியினை போலீசார் அழித்தும் நடவடிக்கை எடுத்தனர்.
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய ஜனநாயகன்
மேலும் ஐபி முகவரியை வைத்து யார் யார் ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சட்டவிரோதமாக பார்ப்பவர்கள், பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கேபிள் டிவியில் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஒளி பரப்பானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கோவை கருமத்தம்பட்டி, சூலூர், பள்ளபாளையம், அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒளிபரப்பாகி வரும் ஒரு உள்ளூர் சேனல், கடந்த 11 ஆம் தேதி இரவு ஜனநாயகன் திரைப்படத்தை ஒளிபரப்பியுள்ளனர். இன்னும் திரைக்கே வராத நிலையில் ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பியை கண்டு அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். ஜனநாயகன் படத்தை படத்தினை சுமார் 2 மணி நேரம் ஒளிபரப்பி இருக்கின்றனர்.
தவெகவினர் போலீசில் புகார்
இதனை பார்த்ததும் தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் விஜய் ரசிகர்கள் அந்த சேனல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதன் பிறகே ஒளிபரபரப்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழே கிடைக்கவில்லை. அப்படி சென்சார் சான்றிதழ் அனுமதியில்லாத ஜனநாயகன் படத்தை கோவையில் உள்ள ஒரு உள்ளூர் சேனல் சட்டவிரோதமாக ஒளிபரப்பியுள்ளது.
படத்தை ஒளிபரப்பிய சேனல் உரிமையாளர் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் தேர்தலுக்கு பிறகு வெளியாவது விஜய் மற்றும் தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது படம் சட்டவிரோதமாக வெளியானது, கேபிள் டிவியில் ரிலீஸ் ஆனது என மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
அன்று சிரஞ்சீவி.. இன்று விஜய்.. இத்தனை ஒற்றுமைகளா? ரிசல்ட் எப்படி இருக்கும்? -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
விஜய்க்கு கூடிய கூட்டம்.. வாயை பிளந்த கட்சிகள்.. ரியாலிட்டி என்ன? விசாரித்த ஸ்டாலின்! பின்னணி -
விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத்












Click it and Unblock the Notifications